ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease

0
கல்லீரல் தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி யாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மை யான உறுப்பாகும். 
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந் துள்ளது. 

நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசிய மாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல் தான். 

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவு களை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்த த்தின் மூலம் எல்லா உறுப்புக ளுக்கும் சென்றடைந்து விடும். 
இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய் களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

இதனால் இதயத் திற்கு தேவை யான ரத்தம் செல்வ தில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படு கிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. 

இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு தேங்குவ தால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்து வதாகவும், 
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
அதிக அளவு கொழுப்பு காணப் படுவதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை உருவாக் குகிறது. அதீதமாக மது பாவிக்கும் அனைவ ருக்கும் (90%-100% ) ஈரலில் கொழுப்பு வருவது நிச்சயம். 

தொடர்ந்து அதிகமாக மது அருந்துப வர்களில் மட்டு மின்றி குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர் களிலும் ஈரலில் கொழுப்பு ஏற்படக் கூடும். 

மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இவர்கள் அனைவ ருக்கும் அவசியமான தாகும்.
ஒரே குடும்ப அங்கத்த வர்களிலும் பரம்பரை யாகவும் ஈரல் கொழுப்பு பிரச்சனை அதிகம் காணப் படுகிறது. 
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
குடும்பத்தில் நிலவும் மதுப் பழக்கமும், அதிகமாக அருந்து கின்ற பழக்கமும் இதற்குக் காரண மாக இருக்கலாம் என எண்ணப் படுகிறது.

மதுப் பாவனையைத் தவிர வேறு காரணங் களும் ஈரலில் பாதிப்பை ஏற்படுத்த லாம். 

பொதுவாக எடை அதிகமாக உள்ளவர் களிடம் இது ஏற்படுகிறது. தவறான உணவு முறை மற்றொரு முக்கிய காரணமாகும்.

ஸ்பெஷல் மட்டன் உப்புக்கறி செய்வது எப்படி?

ஈரல் கொழுப்பு க்குக் காரணம் உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பதே என்பதை ஊகிப்பது சிரமமல்ல. அதிலும் முக்கிய மாக டிரான்ஸ் (Trans fats - trans fatty acids) கொழுப்பு முக்கிய காரண மாகும்.

இரும்புச் சத்து அதிகமாகும் போதும் இது நேரலாம்.

ஹெபரைரிஸ் பீ (Hepaptitis B) எனும் வைரஸ் ஈரல் அழற்சி யின் பின்னரும் இது ஏற்பட வாய்ப்புண்டு.

மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
இப்பொழு தெல்லாம் மதுவைத் தொடாத பலரிலும் காண முடிகிறது. இது பற்றியே இங்கு அதிகம் பேசுகிறோம். 

‘மது அல்லாத காரணங் களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்’ (Nonalcoholic Fatty Liver Disease -NAFLD) என்பார்கள். இது பொதுவாக ஆபத்தான பிரச்சனை அல்ல.

சிலரில் அது ஈரலில் அழற்சியையும் பின்னர் அதன் செயற்பாட்டுத் திறனையும் பாதித்து ஈரல் சிதைவு நோய் (Cirrhosis) ஆகலாம். அரிதாக ஈரல் புற்று நோயும் ஏற்பட லாம்.

காரணங்கள்

மது இல்லாமலும் ஈரலில் கொழுப்பு ஏன் விழுகிறது என்பதற் கான காரண ங்கள் தெளிவாகத் தெரிய வில்லை. ஆயினும் அதிக மற்றும் அதீத எடையுள்ள வர்களிடமும் அதிகம் காணப் படுகிறது. 
இது பரம்பரை யிலும் ஒரே குடும்பத்த வர்களிலும் அதிகம் காணப் படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினரைப் பாதிக்கிறது. 

அத்துடன் கொலஸ்டரோல் அதிகரிப்பு, நீரிழிவு அல்லது நீரிழிவின் முன் நிலையும் சேர்ந்திருப் பதுண்டு.

வைரஸ் ஈரல் அழற்சி நோய்கள், சில மருந்துகள், போஷாக்கற்ற உணவு முறை, திடீரென எடை குறைதல் போன்ற வையும் காரண மாகலாம்.

உணவு முறையே முக்கிய காரணமாகும்.
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
எடை அதிகரிப் பதற்கும், ஈரலில் கொழுப்பு விழுவ தற்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் பிரதான காரண மாகும்.  

அதிலும் முக்கிய மாக ரான்ஸ் (Trans fats - trans fatty acids) கொழுப்பு அதிக பாதிப்பு களை ஏற்படுத்து கிறது. பெரும் பாலான கடைப் பண்டங் களிலும், துரித உணவு களிலும் இது அதிகம் இருக்கிறது.
இந்த ட்ரான்ஸ் கொழுப்பு என்பது என்ன?

தாவரக் கொழுப்புகளை (எண்ணெய்கள்) திடமானதாக ஆக்குவதற்காக ஹைட்ரஜனை தயாரிப்பாளர்கள் சேர்க்கும் போதே Trans fats உருவாகிறது.

ட்ரான்ஸ் பற்ஸ்சை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
விலை குறைவாக இருப்ப துடன் இதைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்கும். 

அத்துடன் அச்சுவையானது வாயில் நீண்ட நேரம் நீடிக்கும். எண்ணெயில் பொரிக்கும் வதக்கும் வறுக்கும் உணவுகளில் இது அதிகம் உண்டு. 

உதாரணமாக ப்ரன்ஜ் ப்ரை, லோனட், பேஸ்ரி, பிட்ஸா, குக்கி, பிஸ்கற், எமது உணவு வகை களில் பொரியல்கள், வடை, ரோல்ஸ், போண்டா, மிக்சர், போன்ற பலவும் அடங்கும்.

அப்படி யானால் நாம் அத்தகைய உணவு களை உண்ணவே கூடாதா? கூடும்! மிகக் குறைந்த அளவில் உண்ணலாம். 
ஆனால் நாம் ஒரு நாளில் உள்ளெடு க்கும் கலோரியின் அளவு 2000 எனில் அதில் 20 மட்டுமே ரான்ஸ் பட்டாக இருக்க வேண்டும். 

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பால் போன்ற வற்றில் இந்த ரான்ஸ் பற் சிறியளவு இருக்கிறது. இது மட்டுமே அந்த 20 தைக் கொடுத்து விடுவதால் ஏனைய ரான்ஸ் பற் உணவு களைத் தவிர்க்க வேண்டும்.

ஈரலில் கொழுப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?;
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
ஈரலில் கொழுப்பு என்று சொன்ன வுடன் மருந்து களை நாடி ஓடக் கூடாது. எமது உணவு உடற் பயிற்சி அடங் கலான வாழ்க்கை முறை மாற்றங் களைச் செய்வதே முக்கிய மானது

எடை குறைப்பு 

ஈரல் கொழுப்பிற் கான சிகிச்சை யின் முக்கிய அம்சம் எடையைக் குறைப்பது தான். 

எடைக் குறைப்பைப் பற்றிப் பேசும் போது ஒருவரது உயரத்திற்கான மிகச்சிறந்த எடைக்கு (Ideal weight) வர வேண்டும் என்பதல்ல. 
பெரும் பாலோனோரில் அது முடியாத காரிய மாகவும் இருக்கும். தங்களது தற்போதைய எடையில் 10 சதவிகித த்தைக் குறைப்பதே மிக நல்ல பலனைக் கொடுக்கும். 

5 சதவிகிதம் குறைத் தாலும் நன்மையே. எனவே எடை குறைப்பு முயற்சியில் தளரக் கூடாது.

எடை குறைப்புச் செய்ய முனையும் போது திடீரென கடுமை யாகக் குறைப்பதும் நல்ல தல்ல. ஒரு வாரத்திற்கு 1.5 கிலோ எடைக்கு மேலே குறைக்க முயல்வது உசிதமானதல்ல. 

எடை குறைப்பின் முக்கிய அம்சங்க ளாவன உண்ணும் உணவின் கலோரி அளவைக் குறைப்பதும் உடற் பயிற்சியை அதிகரிப்பதும் தான்.

உணவைக் குறைப்பது என்பது பட்டினி கிடைப்ப தல்ல. உணவு முறை மாற்றங்கள் தான். 
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
உணவில் அதிக கலோரி வலுவைக் கொடுப்பது எண்ணெய் கொழுப்பு உணவுகள் தான். அதிலும் ரான்ஸ் பற் உணவுகள் பற்றி ஏற்கனவே சொன்னோம்.

ஆசிய நாட்ட வர்கள் ஆகிய எங்கள் உடலில் மேலை நாட்ட வர்களின் உடலில் இருப்பதை விட அதிக கொழுப்பு இருக்கிறது. 

இந்தக் கொழுப்பானது ஈரல் வயிற்றறை உறுப்பு களில் மட்டு மின்றி எமது சருமத் திலும் இருக்கிறது. 

இவ்வாறு கொழுப்பு அதிகமா யிருப்பதற்கு கொழுப்பு உணவுகள் மட்டும் காரணமல்ல. 
நாம் பிரதானமாக உண்ணும் அரிசி மற்றும் கோதுமை போன்ற மாப்பண்ட உணவுகளை அதிகளவில் உண்பதே காரணமாகும். 

அதாவது சோறு இடியப்பம். பிட்டு, போன்ற எல்லா மாச்சத்து உணவுகளை அதிகமாக உண்கிறோம். 

எனவே நாம் எடையைக் குறைக்க வேண்டு மாயின் மாச்சத்துள்ள உணவு களின் அளவைக் குறைக்க வேண்டும். 

குறைத்த அளவிற்கு ஈடாக காய்கறி களையும் பழ வகை களையும் சேர்;த்துக் கொள்ள வேண்டும். 

அதனால் பசியை அடக்கும் அதே நேரம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க முடியும்.

ஈரல் கொழுப்பைக் குறைப்ப தற்கு ஒமோகா 3 மீன் எண்ணெய் (omega-3 fatty acids) உதவும் என நம்பிய போதும் அதற்கான திடமான விஞ்ஞான ஆய்வுகள் இல்லை. 

ஈரலில் குத்தி திசுக்களை எடுத்து ஆய்வு செய்து (Biopsy) ஈரல் கலங்களில் பாதிப்பு உள்ளது 

எனக் கண்ட றிந்தால் விற்றமின் ஈ (Vitamin E) கொடுப்ப துண்டு. ஏனைய வர்களில் அவசிய மில்லை. 

எடையைக் குறைப் பதற்கு சத்திர சிகிச்சை உதவும் என்ற போதும் கொழும்பு ஈரல் பிரச்சனைக்காக அதைச் செய்வது நல்லது என்பது உறுதிப் படுத்தப் படவில்லை. 

ஈரல் சிதைவு (cirrhosis) ஏற்பட்டால் செய்வது நல்லது என்கிறார்கள்.

வேறு பரிசோதனைகள் தேவையா?
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
ஈரலில் கொழுப்பு இருப்பதான ஸ்கான் அறிக்கை கிடைத்த தும் உங்கள் மருத்துவர் நீரிழிவு, நீரிழிவின் முன் நிலை போன்றவை இருக்கிறதா எனக் கண்டறிவார். 

மதுப் பாவனை பற்றிக் கேட்டறிவார். பெரும்பாலும் வேறு பரிசோதனைகளைச் செய்வதில்லை. 

இருந்த போதும் ஈரலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிவ தற்காக எவரையும் ஸ்கான் பரிசோதனை செய்வது அவசிய மல்ல. 

அதே போல ஒருவருக்கு இருந்தால் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களையும் ஸ்கான் செய்து பார்க்க வேண்டியதும் இல்லை. 

வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். 
தினமும் ஏதாவது சில பழங்களை உண்ண லாம். குழம்பு போன்ற வற்றை சமைத்த அன்று மட்டும் தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. 

ரசாயண குளிர் பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவு களை சாப்பிடக் கூடாது. 

சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரண மாகாத உணவுகள் வேர் கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இளநீர், கரும்புச் சாறு, தேங்காய் பால் அருந்த லாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. 

கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடு வதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.
ஈரலில் கொழுப்பு நோய்.... விழிப்புணர்வு பார்வை ! #Liver disease
வெள்ளைபூசணிக்காய் சாறு ரத்தத் திலுள்ள கொழுப்பை அகற்றும். தினமும் சாப்பிட்ட பின்பும் இரவு தூங்க போகும் முன்பும் 

சுடு தண்ணீர் குடித்தால் உணவிலுள்ள கொழுப்பு உணவுப் பாதையிலுள்ள கொழுப்புகள் கரைந்து விடும். 

மிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். 
மஞ்சள் காமாலை க்கு நல்லது.சத்துள்ள ஆகாரத் தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும். பூண்டை தினசரி சமை யலில் சேர்ப்பது நல்லது. 

சீரகப் பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம் படுத்தும். எனவே உங்க ளுக்கு ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் கதி கலங்காதீர்கள். 

உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழுவதற்கான வழிகளைத் தேடுங்கள். அது போதுமானது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings