தகவல் கசியாமல் இருக்க வருமான வரித்துறையினரின் நூதன ஏற்பாடு !

0
சென்னை முழுதும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் அதிகாரிகள் சோதனைக்குச் செல்ல வாடகைக் கார்களை அமர்த்தும் போது சாமர்த்தியமாக திருமணத்துக்கு தேவை என்று பதிவு செய்துள்ளனர்.
தகவல் கசியாமல் இருக்க வருமான வரித்துறையினரின் நூதன ஏற்பாடு !

தமிழகம் முழுதும், டெல்லி, ஹைதராபாத், புதுவை, பெங்களூரு உட்பட 10 நிறுவனங் களைச் சார்ந்த 187 இடங்களில் 


வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனையை ரகசியமாக திட்ட மிட்டுள்ளனர்.

வருமான வரித்துறை யினரின் நூதன ஏற்பாடு:

சோதனை பற்றிய விவரங்கள் யாருக்கும் கசிந்து விடக்கூடாது என்பது குறித்து கவன மாக இருந்த ததால், ஒவ்வொரு அடியையும் ரகசிய மாக எடுத்து வைத்து ள்ளனர். 

வழக்கமாக ஒரு குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் தான் கார்களை வாடகை க்கு எடுப்பார்கள், வருமான வரித்துறை யினர்.

திருமணத்துக்காக 200 கார்கள்:

ஆனால் இந்த முறை பாஸ்ட் ட்ராக் நிறுவன த்தில் 200 கார்களை சோதனைக் காகப் பதிவு செய்து ள்ளனர். 


மொத்த மாக 200 கார்களை வாடகைக்கு எடுக்கும் போது தகவல் கசிந்து அதன் மூலம் சோதனை விவரம் தெரிந்து விடும் என்பதால் 

பெரிய செல்வந்தர் வீட்டுத் திருமண த்திற்கு கார் வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே வாடகை க்கு முன்பதிவு செய்து வைத் துள்ளனர்.

கண்ணாடியில் திருமண அட்டை:

இன்று காலை கார்களை வாடகைக்கு எடுக்கும் போது, அனைத்து கார் ஓட்டுநர் களிடமும் கார் கண்ணாடி யில் ஒட்டும் படி அட்டை ஒன்றைக் கொடுத் துள்ளனர். 

அதில் ஸ்ரீனி வெட்ஸ் மஹி (SRINI-weds-MAHI) என்ற வாசகங்கள் இருந்து ள்ளன. மணமகன் வீட்டாருக்கு கார் வாடகைக்கு எடுப்பது போல் எடுத்து அதில் வந்து சோதனை யில் ஈடுபட் டுள்ளனர்.


கார் ஓட்டுநர்கள் ஏமாந்தனர்:

கார் ஓட்டுநர் களிடம் இது பற்றி கேட்ட போது "எங்களுக்கு திருமண விழாவுக்கு கார் தேவை என்று தான் சொன் னார்கள். 

கல்யாண வீட்டு சவாரி என்று வந்தோம். காரில் வந்தவ ர்களும் விலாசத்தை மட்டும் சொன் னார்கள், இங்கு வந்த பிறகு தான்,

மீடியாக்கள் வந்து பரபரப்பாக செய்திகள் வெளி வந்த பிறகு தான் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரி களை ஏற்றி வந்துள்ளோம் என்பதே தெரிந்தது" என்று கூறினர்.

திரைப்பட பாணியில்

ரஜினி நடித்த சிவாஜி திரைப் படத்தில் இடை வேளைக்குப் பின்னர் வரும் திருப்பு முனை காட்சியில் '1 ரூபாய்' நாணய தொலை பேசியில் சுமனை அழைத்துப் பேசும் ரஜினி, 


சார்.. உங்க வீட்டில் நாளை முகூர்த்தம் என்பார். அதற்கு சுமன், என்னய்யா சொல்ற எனக் கேட்பார். 

ரஜினி, இன்கம் டாக்ஸ் துறையில் முகூர்த்தம் என்றால் வருமான வரித்துறை சோதனை. எல்லா ஆவணங் களையும் பத்திரப் படுத்திக்கவும் என்பார்.

கிட்டத் தட்ட சிவாஜி பட பாணியில் தான் இன்று அதிகாரிகள் முகூர்த்துக் காக எனக் கூறி கார்களை முன்பதிவு செய்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings