தண்டவாளத்தில் சிக்கிய மாணவி... காப்பாற்றிய மக்கள் !

0
தண்ட வாளத்தைக் கடக்க முயன்ற போது விரைவு ரயிலில் சிக்க இருந்த மாணவியை பொது மக்கள் பத்திரமாக மீட்டனர். 
தண்டவாளத்தில் சிக்கிய மாணவி... காப்பாற்றிய மக்கள் !
இதை யடுத்து, சதாப்தி விரைவு ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். 

இவரது மகள் வர்ஷா (13). இவர் வாணியம் பாடியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை 8 மணி அளவில் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்ட வர்ஷா, வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் உள்ள தண்ட வாளத்தைக் கடக்க முயன்றார். 

அப்போது, எதிர் பாரவித மாக தண்ட வாளத்தில் சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதனால், மாணவி வர்ஷா சைக்கிளை மீட்க முயன்றார். 

அந்த நேரத்தில், சென்னை யிலிருந்து மைசூர் செல்லும் சதாப்தி விரைவு ரயில் வந்தது. ரயிலை கண்ட மாணவி தண்ட வாளத்தி லிருந்து சைக்கிளை மீட்க முயற்சி செய்தார்.
ஆனால், சதாப்தி ரயில் அதிவேகத் துடன் வந்ததைக் கண்ட பொது மக்கள் ஓடிச் சென்று மாணவியை பத்திரமாக மீட்டனர். வேகமாக சென்ற ரயிலில் சைக்கிள் சின்னா பின்னமானது.

ரயில் சக்கர த்தில் சைக்கிள் சிக்கிய தால் தண்ட வாளத்தில் உராய்வு ஏற்பட்டது. இதை யறிந்த இன்ஜின் ஓட்டுநர் ரயிலை வாணியம்பாடி ரயில் நிலைய த்தில் நிறுத்தினார்.

பிறகு ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சைக்கிளை அப்புறப் படுத்தினர். 30 நிமிடங்கள் கால தாமதத்து க்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
பொது மக்கள் விரைந்து செயல்பட்டு விபத்திலிருந்து மாணவியை காப்பாற்றிய செயலை, ரயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings