இந்தியில் கங்கணா ரணாவத் நடித்த குயின் அளவுக்குத் தான் நடிக்கும் பட்டர்ஃபிளை படம் பேசப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நடிகை பருல் யாதவ்.
2014ஆம் ஆண்டு வெளியான குயின் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார் பருல் யாதவ்.
இந்தப் படத்தில் நடித்து வருவது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸு க்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய சினிமாவில் குயின் திரைப்படம் நிச்சயம் ஒரு மைல் கல்.
அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்து கிறது. ஆனால், இன்று வரை நான் செய்த அனைத்துப் படங்களையும் புதையலாக நினைக்கிறேன்.
நல்ல கதைகள் முடிந்த வரை பல மொழிகளில் எடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு நல்ல கதை என்பது மனதுக்குள் ஊடுருவி நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் குயின் தாக்கத்தை ஏற்படுத் தியது போல கன்னடத் திலும் பட்டர் ஃபிளை தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக ஏற்படுத்தும்.
இந்தக் கதை உலகளாவிய மற்றும் எல்லோரையும் தொடர்புபடுத்தக் கூடிய கதையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப் படுகிறது.
தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பரூல் யாதவ் நடித்து வருகின்றனர்.
தற்போது பாரீஸில் அனைத்து மொழி ரீமேக்கின் படப்பிடிப்பும் நடை பெற்று வருகிறது.
தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பரூல் யாதவ் நடித்து வருகின்றனர்.
தற்போது பாரீஸில் அனைத்து மொழி ரீமேக்கின் படப்பிடிப்பும் நடை பெற்று வருகிறது.
Tags:
Thanks for Your Comments