'டில்லியில் அமல் படுத்தப் பட்ட, வாகனக் கட்டுப் பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத் தால் எந்தப் பலனும் ஏற்பட வில்லை;
காற்று மாசு அளவு, 23 சதவீதம் உயர்ந் துள்ளது' என,மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது.
தலைநகர் டில்லி யில் மாசு அளவு 23 சதவீதம் உயர்வு: வாகன கட்டுப்பாடு திட்டத் தால் பலன் இல்லை?
உலகில், அதிகமாசு நிறைந்த நகரங்களில் முதல் இடத்தில் உள்ளது டில்லி. இங்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி உள்ளது.
போக்கு வரத்து நெரிசலை குறைக் கவும், காற்று மாசு படுவதை தடுக்கவும், வாகனக் கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப் பட்டது.
பதிவெண் அடிப்படை யில்...அதன்படி, 'ஒற்றை இலக்க எண் உள்ள வாகன ங்கள் ஒற்றைப் படை தேதிகளும்,
இரட்டைப் படை இலக்க எண் உள்ள வாகன ங்கள் இரட்டைப் படை தேதிகளில் மட்டுமே இயக்க வேண்டும்' என, டில்லி அரசு உத்தர விட்டது.
ஜனவரி, 1 முதல், 15ம் தேதி வரை, முதல் கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல், 15 முதல், 30ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக, வாகனக் கட்டுப் பாட்டு முறை அறிமுகம் செய்யப் பட்டது.
இந்த திட்டம், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. 'இந்த இரண்டாம் கட்ட காலத்தின் போது, ஏப்ரல் மாதத்தின், முதல், 15 நாட்களுடன் ஒப்பிடுகை யில்,
காற்றில் மாசு, 23 சதவீதம் உயர்ந்துள்ளது; இந்த திட்டத் தால் எந்தப் பலனும் ஏற்பட வில்லை.
மாற்று திட்டங்கள் குறித்து ஆராய வேண்டும்' என, மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம் கூறிஉள்ளது.
எழுந்தது சர்ச்சை:டில்லி நிர்வாகம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் தலைமை யிலான அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.
இந்நிலை யில், மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாறு கூறியுள்ளது, சர்ச்சையை எழுப்பி யுள்ளது.
கணக்கிடுவது எப்படி?: நம் தலைமுடி சராசரியாக, 50 முதல், 70 மைக்ரான் அளவு உள்ளது. கடற்கரை மணலின் ஒரு துகளின் அளவு, 90 மைக்ரானாகும்.
ஒரு கன மீட்டரில் எத்தனை மைக்ரான் அளவுக்கு, மாசு ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் உள்ளது என்பதன் அடிப்படை யிலேயே, காற்றின் மாசு கணக்கிடப் படுகிறது.
பி.எம்., 2.5 மற்றும், பி.எம்., 10 என்ற, இரண்டு முறையில் இந்த அளவு கணக்கிடப் படுகிறது.
அதாவது, 2.5 மைக்ரோ கிராம் விட்டம் உள்ள பொருட்கள், ஒரு கன மீட்டரில் எவ்வளவு உள்ளது என, கணக்கிடப் படுகிறது.
அதன்படி, 30க்கும் குறை வானஅளவுக்கு இருந்தால், சுத்தமான காற்று; 31 - 60 வரை இருந் தால் திருப்தி; 61 - 90 இருந்தால்,
மிதமானது; 91- -- 150 இருந்தால், மோச மானது; 151 - 250 வரை இருந்தால் மிகவும் மோசம்; 250 க்கு மேல் இருந்தால், அது ஆபத்தானது.
61 - 90 வரை இருந்தாலே, மூச்சு விடுவ தற்கு சிரமப்பட வேண்டும். நுரை யீரல் பாதிப்பு, ஆஸ்துமா, மாரடைப்பு ஏற்படுவ தற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
திணறு கிறது டில்லி:: டில்லியின் காற்றில் உள்ள மாசு குறித்து, மாசுகட்டுப் பாட்டு வாரியம் கூறியுள்ள தாவது:
டில்லியில் கடந்த மாதம், 15 முதல், 29ம் தேதிகளில் பதிவான மாசு அளவுகளை,
மாதத்தின் முதல், 15 நாட்களுடன் ஒப்பிடுகையில், காற்றில் உள்ள மாசு அளவு, 23 சதவீதம் உயர்ந்துள்ளது.
வாகனக் கட்டுப் பாடு காலத்தில், டில்லியில், பி.எம்., 2.5 அளவின் சராசரி, 68.98 ஆக இருந்தது. இதுவே, மாதத்தின் முதல், 15 நாட்களில், 56.17 ஆக இருந்தது.
நாடு முழுவதும் எடுக்கப் படும் மாசு அளவு களின் படி, பெங்களூரு, சென்னை, டில்லி, மும்பை
ஆகிய பெருநகரங் களில், காலை நேரத்தில், காற்றில் மாசுவின் அளவு மிகவும் மோச மான நிலையில் உள்ளது.
வாகனக் கட்டுப்பாடு திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
கடுமை யான வெயில் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருந்த போதும், மக்கள் மகத்தான ஆதரவை அளித்து உள்ளனர்; அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி இரண்டாம் கட்ட வாகனக் கட்டுப்பாடு குறித்து,
ஆறு பேர் அடங்கிய நிபுணர் குழு, தன்அறிக் கையை, மே, 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்.
டில்லி மாசு கட்டுப்பாடு வாரியமும், தன் அறிக்கையை, 9ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்.
அதன் பின், அடுத்தக் கட்ட வாகனக் கட்டுப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
Thanks for Your Comments