'துாய்மை இந்தியா' திட்டத்தை, மக்களிடம் பிரபலப் படுத்துவ தற்கு உதவும்படி, விளை யாட்டு, சினிமா என, பல துறை சார்ந்த பிரபலங் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத் துள்ளார்.
பிரபலங்கள், மோடி, அழைப்பு
பொது இடங்களை துாய்மை யாக வைத்துக் கொள்ளும் நோக்கில், 2014ல், பிரதமர் மோடி, 'துாய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்தார்.
இதன் மூன்றாண்டு நிறைவு விழா, காந்தி ஜெயந்தி யான, அக்., 2ல் கொண்டா டப்பட உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 'துாய்மையே சேவை' என்ற பெயரில், பிரசார இயக்க த்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் துவக்கி
வைத்தார். இந்நிலை யில், இத்திட்ட த்தை பிரபலப் படுத்த உதவும்படி, பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுக ர்களுக்கு, பிரதமர் மோடி கடிதம் எழுதி வருகிறார்.
பங்களிக்க வேண்டும்
அதன் விபரம்: துாய்மை இந்தியா என்பது, ஏழை மக்களு க்கு செய்யும் தொண்டு. துாய்மை யான இந்தியாவை உருவாக்க, மகாத்மா காந்தி கனவு கண்டார்;
மக்கள் பங்களிப் புடன், துாய்மை இந்தியா உருவாக எண்ணினார். அவரது எண்ணம் ஈடேற, அனைவரும், 'துாய்மை
இந்தியா' திட்டத் திற்கு பங்களிக்க வேண்டும்.
இதன் மூலம், புதிய இந்தியாவை உருவாக்க முடியும். இந்த இயக்க த்தில், உங்கள் பங்களிப்பு மிக முக்கியம்;
எனவே, இந்த மாபெரும் இயக்க த்திற்கு, உங்கள் பங்களிப்பை செலுத்த அழைக் கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மோகன் லால் ஆதரவு
'துாய்மையே சேவை' பிரசார இயக்க த்தில் பங்கேற்கும் படி, மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, பிரதமர் மோடி, சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு ஆதரவு தெரிவித்து, தன், 'பேஸ்புக்' பக்கத்தில், மோகன் லால் பதி விட்டுள்ள செய்தி யில்,
'துாய்மையே சேவை என்ற புனித பணியில், என்னையும் இணைக்க முடிவு செய்து ள்ளேன்.
புதிய இந்தியாவை உருவா க்கும் இத்திட்ட த்திற்கு, என் பங்களிப்பை செலுத்த உள்ளேன்' என, கூறப் பட்டுள்ளது.
Thanks for Your Comments