சென்னைக்கு மழையா? - வெதர்மேன் பதிவு | Rain for Chennai - Weather man Post !

0
மேகக் கூட்டங்கள் போக்கு காட்டுவ தால் காற்றின் திசையை வைத்து தான் சென்னை க்கு மித மழையா? கன மழையா? என்பதை அறிய முடியும். 


இது குறித்து தற்போதைய நிலவர த்தை தமிழ்நாடு வெதர்மேன் முக நூலில் பதிவிட் டுள்ளார்.

அவரது முக நூல் பதிவு:

“வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு கன மழையா? அல்லது நின்று ‘விளை யாடும்’ மழையா?

சென்னை நகர் புறப்பகுதி முழுவதை யும் மேகக் கூட்டங்கள் பரவி நிதான மான மழையை பெய்ய இருக்கிறது. 

மிகவும் அடர்த்தி யான, பெரிய மேகக் கூட்டம் சென்னை க்கு அருகே வருகிறதா? என்பதை பொறுத் திருந்து பார்ப்பது அவசியம். 

ஒருவேளை வரா விட்டால், இந்த மிதமான மழை மட்டும் நமக்கு கிடை க்கும்.

சென்னை க்கு அருகே மிகவும் அடர்த்தி யான, தீவிரமான மேகக் கூட்டங்கள் வந்து விட்டன. 

காற்று இல்லாத, மிதமாகப் பெய்யும் மழை பெய்யும். இதற் கிடையே மழைக்கு சாதகமான வெப்பநிலை சென்னைக்கு அருகே உருவா னால், 

குறைந்த காற்ற ழுத்த தாழ்வுப் பகுதிக்குள் சுழன்று கொண்டு இருந்த மேகக் கூட்டங்கள் சென்னைக்கு மேலே பரவி கன மழையை கொடுக்கும்.

ஒரு வேளை அந்த மேகக் கூட்டம் சென்னையை விட்டு விலகி னால், நமக்கு மிதமான, மிதமான மழை மட்டுமே கிடைக்கும். 

என்னுடைய அடுத்த பதிவு என்பது மழை எப்படி பெய்யும்? என்பதைக் குறிப்பிட்டு இருக்கும்.

அதாவது, நமக்கு மிதமான மழை கிடைக்குமா?அல்லது, கன மழை இருக்குமா? என்பதை அடுத்த பதிவில் உறுதி யாகக் கூறி விடுவேன்”.

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்று முன் பதிவிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings