நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சியை அறிவிக்கிறார் என்ற கேள்விக்கு அவரின் சகோதரர் சத்ய நாராயணராவ் பதில் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த் பிறந்த தினமான டிசம்பர் மாதம் இன்னும் பிறக்கவே இல்லை. அதற்குள் அரசியல் பரபரப்பு பரபரவென பற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.
ரஜினி அரசியல் கட்சி குறித்து ஜனவரியில் அறிவிக்கப் போகிறார் என்று ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் மீடியாக்களிடம் செய்தி வேக வேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக் காட்சி சேனல் களும் இந்தச் செய்தி உண்மை தானா என்று
தொடர்பு கொண்டு அறியாமலே, போட்டிப் போட்டுக் கொண்டு பரபரப்பாகச் செய்தியைப் பரப்பி வருகின்றன.
இந்தச் செய்தி யில் உண்மை இருக்கிறதா என அறிந்து கொள்ள ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க் வாட்டிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம். நான் மீடியாக் களை சந்தித்தது உண்மை.
ரஜினி குறித்து நான் சொன்னதாக அவர்கள் வெளியிடும் செய்தி பொய். ஏற்கெனவே, மே மாதத்தில் தமிழகத்தில் இருக்கின்ற ரசிகர்கள் பாதிப்பேரை சந்தித்து ரஜினி போட்டோ எடுத்துக் கொண்டார்.
விரைவில் மீதி இருக்கும் ரசிகர் களைச் சென்னைக்கு வர வழைத்து போட்டோ எடுக்கப் போகிறார்.
அதன் பிறகே, ரஜினி தனியே முடிவெடுத்து அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நான் சொன்னேன்.
இந்த உண்மைச் செய்தியை மறைத்து, சும்மா ஒண்ணுக்கு ரெண்டாய் தப்பு தப்பாய் செய்தியை ஏன் தான் வெளியிடு கிறார்கள் என்பதே தெரிய வில்லை என்று கூறினார்.
Thanks for Your Comments