வருமானவரி சோதனையின் போது வீட்டின் கதவை திறக்க மறுப்பு !

0
திருச்சி ராஜா காலனியில் உள்ள தினகரனின் உறவினர் (சகலை) டாக்டர் சிவக்குமாரின் வீட்டுக்கு சோதனை நடத்த 3 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் நேற்று வந்தனர். 
வருமானவரி சோதனையின் போது  வீட்டின் கதவை திறக்க மறுப்பு !
சிவக்குமாரின் தந்தை சத்தியமூர்த்தி பயன்படுத்தி வருவ தாகக் கூறப்படும் முதல் தளத்துக்குச் சென்ற வருமான வரித்துறையினர், 

வீடு பூட்டியிருப்பதைக் கண்டு தரைதளத்தில் வசிக்கும் வாடகை தாரரான ஜோதிடர் மகேந்திர வர்மாவிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், பூட்டு சரி பார்க்கும் தொழிலாளர் ஒருவரை அழைத்து வந்து அந்த அறையின் பூட்டை திறக்கு மாறு கேட்டனர். 

ஆனால், செய்தி யாளர்கள் சூழ்ந்தி ருப்பதை கண்ட அந்த தொழிலாளி, நீங்கள் யார்? உரிமை யாளர் இல்லாமல் திறக்க முடியாது என்று கூறி பூட்டைத் திறக்க மறுத்து விட்டார். 

இதை யடுத்து, அவரை கீழே அழைத்து வந்து தங்களது அடையாள அட்டை களை வருமான வரித் துறையினர் காண் பித்தனர். 
பின்னர், அந்தத் தொழிலாளி கிரில் கேட் பூட்டை மட்டும் திறக்க உதவினாராம். ஆனால், பிரதான மரக்கதவை திறக்க முடிய வில்லை என்று கூறி விட்டு புறப்பட்டு விட்டாராம்.

இதை யடுத்து, அதிகாரி கள் மீண்டும் தரை தளத்தில் உள்ள வீட்டு க்குள் சென்று விட்டனர். பிற்பகல் 4 மணி வரை அவர்கள் அந்த வீட்டு க்குள் இருந்தனர். 

அவ்வப்போது மாடியைச் சென்று பார்ப்பதும், மீண்டும் திரும்புவ துமாக இருந்தனர். பின்னர், 5.30 மணியளவில் மாறன் என்பவர் வந்து சாவியைக் கொடுத்தார். 

சென்னையில் இருந்து அந்த சாவி எடுத்து வரப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை யடுத்து, மாலை 5.40 மணி யளவில் வீட்டைத் திறந்து உள்ளே சோதனை நடந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings