முடங்கிய ரிலையன்ஸ் போன்... முதலீடு என்ன ஆச்சு?

0
ஒரு பக்கம் முகேஷ் அம்பானி யின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் போன் செயல் இழந்து உள்ளது.
முடங்கிய ரிலையன்ஸ் போன்... முதலீடு என்ன ஆச்சு?

கடந்த 2002ஆம் ஆண்டு ரூ.500க்கு இரண்டு மொபைல் போன்கள் கொடுத்து மொபைல் உலகில் புரட்சி செய்த ரிலையன்ஸ் நிறுவனம், 

இன்று தங்களுடைய கோடிக் கணக்கான வாடிக்கை யாளர்க ளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சேவையை நிறுத்தி விட்டதாக கூறப் படுகிறது.

ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் தங்களுடைய சேவையை நிறுத்த வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 90 நாட்களு க்கு முன்னரே அறிவிக்க வேண்டும். 

ஆனால் திடீரென ரிலையன்ஸ் போன் செயல் இழந்துள்ள தால் லட்சக் கணக்கான வாடிக்கை யாளர்கள் தவித்து ள்ளனர். 

மேலும் ஆதார், கியாஸ், வங்கி என அனைத் திலும் இந்த மொபைல் எண்களை கொடுத் துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பலர் விழி பிதுங்கி உள்ளனர்.

அதே போல் ரிலையன்ஸ் நிறுவன த்தின் ரீசார்ஜ் கூப்பன் களை ஆயிரக் கணக்கில் லட்சக் கணக்கில் கைவசம் இருப்பு வைத்தி ருப்பவர் களின் நிலை பரிதாப மாக உள்ளது. 

தமிழக த்தில் மட்டும் ரூ.5 கோடிக் கான ரீசார்ஜ் கூப்பன் தேங்கி யிருப்பதா கவும், அகில இந்திய அளவில் கணக் கிட்டால் பல கோடிகளை தொடும் என்று கூறப் படுகிறது. 

இந்த பிரச்சனை க்கு அரசு தான் ஒரு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து செல்போன் - ரீசார்ஜ் கூப்பன் விற்பனை யாளர்கள் சங்கத்தின் தலைவர், விஸ்வநாதன் கோரிக்கை விடுத் துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings