விஞ்ஞானி வீட்டில் சந்தன மரம் கொள்ளை !

0
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சர்.சி.வி.ராமன் வீட்டில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கொள்ளை யடித்துள் ளனர்.

விஞ்ஞானி வீட்டில் சந்தன மரம் கொள்ளை !
இந்தியாவில் இயற்பியலுக் கான நோபல் பரிசை பெற்றவர் விஞ்ஞானி சர் சி.வி.ராமன். 

இவருக்குச் சொந்த மான வீடு பெங்களூரு மல்லேஸ்வரம் 15–வது தெருவில் உள்ளது. இவரின் மறை விற்குப் பின், 

இந்த வீட்டைக் கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. இவருடைய வீட்டின் அருகே ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. 

தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவருடைய வீட்டில் காவலாளி கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இதேபோல், நேற்று இரவு (நவம்பர் 11) சீனிவாஸ் மற்றும் கங்காதர் ஆகியோர் காவல் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலை யில், அதிகாலை சுமார் 3.30 மணியள வில் அவருடைய வீட்டு வளாகத்தி ற்குள் முகமூடிகள் 

அணிந்து வந்த 6 மர்ம நபர்கள் காவலாளி கள் இருவரையும் மிரட்டி, அங்கிருந்த இரண்டு சந்தன மரங் களையும் வெட்டி அதனைத் துண்டாக்கி அவர்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிச் சென்றனர்.
இதுபற்றி காவலாளி கள் இருவரும் மல்லேஸ்வரம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்தனர். 

அதன் பேரில், மல்லேஸ்வரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகி ன்றனர்.

மேலும், சந்தன மரத்தை வெட்டி யவர்கள் தமிழில் பேசிய தாகவும் கூறப்படு கிறது.

தற்போது தலை மறைவாக உள்ள 6 மர்ம நபர்களை யும் காவல் துறையினர் தேடி வருகி றார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings