சசிகலாவின் சட்டத்தரணி செந்தில் வீட்டிற்கு சீல் !

0
சசிகலாவின் சட்டத்தரணி செந்தில் வீட்டில், பூட்டுப் போடப்பட்ட அறை யொன்று மற்றும் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றிற்கும், சீல் வைக்கப்பட்டுள்ள தாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலாவின் சட்டத்தரணி செந்தில் வீட்டிற்கு சீல் !
கடந்த மூன்று தினங்களாக, சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் தீவிர சோதனையை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறையினர், 

கடந்த வெள்ளிக்கிழமை செந்தில் வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போதே, மேற்கண்டவாறு சீல் வைத்து ள்ளனர்.

மேலும் செந்திலின் உறவினர் களான ஏ.வி.பாலுசாமி வீடு, செந்திலின் தொழில் பங்குதாரர் என கூறப்படும் எம்.ஜி.நகரைச் சேர்ந்த சுப்ரமணியம், 

செந்திலின் உதவியாளரான வழக்கறிஞர், முல்லை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோரது வீடு மற்றும் அலுவல கங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ள தாகவும், அவை குறித்த விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருவ தாகவும், வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றமை குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings