நடிகை த்ரிஷா ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக நியமிக்கப் பட்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவை களிலும் நாட்டம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தை களுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பர த்தில் த்ரிஷா தோன்றி நடித்தார்.
தற்போது விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்ற வற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார்.
இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கி யுள்ளனர்.
த்ரிஷாவை யுனிசெஃப் தூதராக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை யில் நடந்தது. நிகழ்ச்சி யில் பங்கேற்ற த்ரிஷா பேசுகையில், இது எனக்குப் பெரிய கவுரவம்.
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞ ர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக் காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன்.
பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்து விடலாம்," என்றார்.
தென்னிந்திய சினிமாவி லிருந்து ஒரு நடிகை யுனிசெஃப் அமைப்பின் இந்த அங்கீகார த்தைப் பெறுவது இதுவே முதல் முறை யாகும்.
Thanks for Your Comments