என்னுடைய ஆராய்ச் சிகள் மட்டு மல்லாது, அனை வரின் ஆராய்ச் சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர் களுக்கும் இலவச மாக, தடை யின்றி படித்துக் கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.”
உலகின் தலைசிறந்த அறிவியலா ளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் அவர் களின் வார்த் தைகள் இவை.
இளம் வயதில் மோட்டார் நியூரான் நோய் தாக்கி தன் உடலின் செயல்பாட்டை இழந்தார். இருந்த போதும், அறிவியல் மேல் அவருக் கிருந்த காதல் கொஞ்சமும் குறைய வில்லை.
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் !
தன் 24ம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்த போது 134 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார்.
“விரி வடையும் பேரண்டத்தின் பண்புகள்” (Properties of expanding universes) என்ற தலைப்பில் வெளியிடப் பட்ட அது நம் அண்ட த்தின் மீது நமக்கு அப்போதி ருந்த இருந்த அறிவை மேலும் அகலப் படுத்தியது.
எண்ணற்ற பல விடையில்லா கேள்வி களுக்கு விடைகள் தானாகப் புலப் பட்டது. முனைவர் பட்டம் பெற இதையே தன் ஆய்வறிக் கையாகச் சமர்ப் பித்தார். இது நடந்த வருடம் 1965.
சென்ற வாரம் வரை, இந்த ஆய்வறி க்கையைப் படிக்க, நகல் எடுக்க ஒரு மாணவன் 65 பவுண் டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நூலகத் திற்குக் கட்டண மாக செலுத்த வேண்டும்.
தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இதை இலவச மாகப் படித்துக் கொள்ள, தர விறக்கம் செய்ய அனுமதி யளித்து ள்ளது.
தன்னுடைய இணையத் தளத்தி லேயே இந்த ஆய்வுக் கட்டு ரையின் ஸ்கேன் செய்த நகலை வெளியிட் டுள்ளது.
வெளியான ஒரு வாரத் திலேயே, 20 லட்சம் வியூஸ்களைத் தாண்டி யுள்ளது இந்தக் கட்டுரை.
இது வரை, சுமார் 5 லட்சம் பேர் இதைத் தர விறக்கம் செய்து ள்ளார்கள். அப்படி என்ன இருக்கிறது அந்தக் கட்டுரை யில்?
ஆராய்ச்சிக் கட்டுரை
விரி வடைந்து கொண்டே இருக்கும் நமது பேரண்டத்தின் பல்வேறு பண்பு களை குறித்து அலசி ஆராய்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.
அண்டம் விரி வடைவதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் என்னென்ன என்பதைச் சுற்றி பல்வேறு கோட் பாடுகள் மற்றும் விளக் கங்களை முன் வைக்கும் இது,
17 வயது பெண் அண்ணன் தம்பிகள் மூவருக்கு மனைவியாக்கப்பட்ட துயரம் !
இயற்பியல் உலகில் ஓர் அசாத்திய மைல்கல். இதன் ஒவ்வொரு பகுதியும் எதைக் குறித்துப் பேசுகிறது என்று காண்போம்.
முதல் பகுதி, நம் அண்டம் விரி வடையும் நிகழ்வு எவ்வாறு ஹோயல் - நர்லிகர் அவர்களின் ஈர்ப்பு விசை கோட் பாட்டை (Hoyle-Narlikar theory of gravitation) பாதிக்கிறது என்று விளக் குகிறார்.
இரண்டாம் பகுதியில், ஒரே இயல் புடைய சமநிலை யற்ற பிரபஞ்சம் விரி வடைவ தால் இயல்பான அதன் பண்பு களில் என்ன வெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து விவரிக் கிறார்.
இதே பகுதியில், சமீபத்தில் உணரப்பட்ட ஈர்ப்பு விசை அலைகள் குறித்தும் அப்போதே பேசி யுள்ளார்.
மூன்றாம் பகுதியில் ஈர்ப்பு விசை அலைகள் அணுகு கோட்டு விரிவின் அடிப்படை யில் (asymptotic expansion) நம் அண்ட த்தில் எவ்வாறு பரவு கிறது என்று விளக்கு கிறார்.
இறுதிப் பகுதியில் விரி வடையும் அண்டங்கள் ஒரு மையப் பகுதியில் குவிந்து (Singularity) நிலை குலையும் தன்மையைப் பற்றி விளக்கு கிறார்.
இந்த ஆராய்ச்சி முழுவதும் இலவச மாக இணைய உலகத்தில் பகிரப் பட்டதை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங்,
“இதன் மூலம் இளைய சமுதாய த்தை என் ஆராய்ச் சிகள் ஊக்கப் படுத்தும் என்று நம்பு கிறேன்.
நான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் போது, என்னை மிகவும் ஊக்கப் படுத்தியது ஐசக் நியூட்டன், ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோரின் ஆராய்ச் சிகள் தான்.
இப்பேரண்டத்தில் நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம், எவ்வாறு இருக்கி றோம்,
வீடு கட்ட இனிய இல்லக் குறிப்புகள் !
மாபெரும் அண்டத்தின் தன்மையை உணர்வது போன்ற புரிதல் களை இந்த ஆராய்ச் சியின் மூலம் பெற்று விட முடியும்” என்று தெரிவித்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங் அவர் களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை யின் மேலும் ஒரு சிறப்பு அம்சம், இது முழுக்க முழுக்க தட்டச்சு செய்யப் பட்ட ஒரு புத்தகம்.
1966ம் ஆண்டில் எழுதப் பட்டதால், அப்போது தட்டச்சில் பல கணிதக் குறியீடுகள் கிடை யாது. எனவே, அவை மட்டும், தேவை யான இடத்தில் கைகளால் எழுதப் பட்டுள்ளன.
Thanks for Your Comments