டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

0

டெல்டா  (கழிமுகம்) என்றால் ஒரு முக்கோண வடிவிலான குறைந்த, தட்டையான நிலப்பரப்பு ஆகும். ஒரு ஆறு மலையில் தோன்றி கடலில் கடக்கும், மலைப்பகுதி சரிவாக உள்ளதால் மிகவும் வேகமாக ஓடும். 

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District
அப்போது அதன் வழியில் உள்ள அனைத்தையும் அடித்து நொறுக்கி தன்னுடன் எடுத்துச் செல்லும். மலையடிவாரம் கடந்து சமதள பகுதியை அடையும் போது அதன் வேகம் குறையும் அப்போது பெரிய அளவு பாறை மற்றும் கல் ஆகியவை அங்கேயே இட்டு தன் பயணத்தைத் தொடரும்.

பருந்து மனிதனுக்கு தரும் பாடம் என்ன?

அந்த ஆறு கடலினை அடையும் போது சமவெளியில் மிக மெதுவாக நகரும் அப்போது அந்த ஆறு தன்னுடன் கொண்டு வந்த மணல்கள், வண்டல் மற்றும் களிமண் அனைத்தையும் விட்டுச் செல்லும். 

ஏற்ற இறக்கங்கள் மணலையும் சேற்றையும் அடித்துச் செல்லா விட்டால் அவை புதிய வண்டல் நிலத்தை உண்டாக்குகின்றன. 

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

பல கிளைகளாகவும் பிரிந்து செல்லும் அந்த உருவமைப்பு பார்க்க கணிதத்தில் உபயோகிக்கும் ∆ போன்று இருக்கும் எனவே அந்த நிலப்பகுதியை டெல்டா  எனக் கூறுவர்.  

டெல்டா என்பதற்குரிய தமிழ்ச்சொல், கழிமுகம் என்பது. ஆறு கடலில் சேர்ந்து கலக்கும் இடத்தை யொட்டிய நிலப்பகுதிக்குக் கழிமுகம் என்று பெயர். கடைமடை என்றும் சொல்லலாம். 

கை விரல்களை தேய்த்தால் முடி வளரும் !

இப்பகுதியில் தண்ணீர் நன்றாக இருப்பதால் இங்கு வயல் நிலங்கள் அதிகமாக இருக்கும். முக்கியமாக நெல் வயல்கள். தமில் நாட்டில் மிக முக்கியமான ஆறு காவிரி என்பதினால், இந்த ஆறு கடைசியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் போய் டெல்டாவாக மாறுகிறது.

இதே போல் ஆந்திராவிலும் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளின் டெல்டா பகுதிகள் காணலாம்.

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா, வங்காள தேசத்தின் பெரும் பகுதியிலும், மேற்கு வங்காளத்திலும் பரவி, இந்தியா வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 

இது உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும். ஆற்றின் ஒரு பகுதி கடலின் ஒரு பகுதியுடன் ஒன்றிணையும் இடம் கழிமுகம் என வரையருக்கப் படுகின்றது 

புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !

கழிமுகம் பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது களிமுகங்களில் உவர் தன்மை நிலையற்றதாக இருக்கும். 

ஏனென்றால் நன்னீர் கடல் நீர் உவர் தன்மையை நீர்க்கச் செய்யும் களி முகங்களில் வாழும் உயிரினங்கள் உவர் தன்மையை சரிப்படுத்த பல்வேறு தகவைமப்புகளை கொண்டிருக் கின்றன.

காவேரி டெல்டா மண்டலம்

டெல்டா மாவட்டம் என்றால் என்ன? #Delta District

மாவட்டங்கள் – தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை முக்கிய பயிர்கள் – நெல், நெல்லிற்கு அடுத்த படியாக உளுந்து மற்றும் பச்சைப் பயிறு சாகுபடி செய்யப் படுகிறது. 

காய்கறிப் பயிர்களான கத்திரி, மிளகாய் மற்றும் கீரை வகைகள் குறிப்பிட்ட பகுதி களில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அதாவது கோடை காலங்களில் வளமான மண், மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத் தினைக் கணக்கில் கொண்டு பயிரிடப்படுகிறது. 

ஆண்கள் வயதுக்கு வரும் அறிகுறி என்ன? எப்படி தெரிந்து கொள்வது?

வயலிகளில் மிதமான களிமண் வகை காணப்பட்டால் அந்நிலங்களில் நிலக்கடலை, மக்காச்சோளம், எள், ஆகியவை பயிரிடப் படுகின்றது. 

மேலும் வாழை, கரும்பு, மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, சாமந்தி, கனகாம்பரம்,  மற்றும் அரளி வகை மலர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக பயிரிடப்பட்டு அதிக இலாபம் பெறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings