மழை வெள்ளம் வடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?

வெள்ளத்தால் பாதிக்கப் பட்டால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது என்பது மிகக் கடினமான ஒன் றாகும்.

மழை வெள்ளம் வடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?
உயிர் இழப்பு, உடமைகள் இழப்பு என பல்வேறு இழப்புகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை சீற்றங் களால் ஏற்படு கின்றன.

வெள்ள த்தின் போது தங்களை காப்பாற்றிக் கொள்ள போராடும் மக்கள் வெள்ளம் வடிந்த பின்னரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

மழை வெள்ளம் வடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?

பாது காப்பான நிலை திரும்பும் வரை வெள்ளம் வடிந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.

வெள்ளநீர் வடிந்த பின்னரும் ஆறுகள், குளங் களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.

வெள்ளம் புகுந்த கட்டிடத் திற்குள் செல்லும் முன் அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும், 

கட்டிடத்தை சுற்றி வெள்ளநீர் இருந்தாலோ அல்லது கட்டிடத் திற்குள் வெள்ளநீர் இருந் தாலோ உள்ளே நுழையக் கூடாது.
வெள்ளத் திற்கு பின்பு கட்டிடத் திற்குள் நுழையும் போது மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.

கட்டிட கட்ட மைப்பில் விரிசல் மற்றும் சேதம் உள்ளதா என பரிசோதி க்கவும். அனைத்து சுவர்கள், தரைப் பகுதி, மேற்கூரை கதவு மற்றும் ஜன்னல் களை ஆய்வு செய்யவும். 

இதனால் கட்டிடம் இடிந்து விழுவ தற்கான வாய்ப்பை முன் கூட்டியே அறிந்து, அதனால் ஏற்படும் ஆபத்தையும் அறிந்து செயல் படலாம்.

கட்டிடத் திற்குள் உள்ள மின் இணைப் புகள், தரையி லிருக்கும் அடுப்புகள் கொதி கலன்கள், எரிவாயு சிலிண்டர் 

மற்றும் மோட்டார் பம்பு போன்ற இதர மின் உபகரண ங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும்.

வடிகால் அமைப்பில் உடைப்பு ஏற்பட்டு இருக்கு மாயின் கழிப்பறை மற்றும் குழாய் தண்ணீர் உபயோக த்தை நிறுத்தி விடவும்.

கழிவுநீர் குழாய மைப்பில் சேதம் ஏற்பட்டி ருந்தால், உடனடி யாக சரி செய்வதன் மூலம் நோய் பரவுவதை தவிர்க் கலாம்.

வெள்ள நீரோடு கொடிய பூச்சிகள் மற்றும் விஷப் பாம்புகளும் வீட்டிற்குள் புகுந்திரு க்கலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.
வெள்ள நீரில் நனைந்த மருந்துகள், உணவு மற்றும் தண்ணீர் (அது அடைக்கப் பட்ட பண்டங்கள்) போன்ற வற்றை பயன் படுத்த வேண்டாம்.

மின் உபகரண ங்களில் சேதம் ஏற்பட்டி ருந்தால் மின் இணைப்பை உடன் துண்டி க்கவும்.

கொதிக்க வைத்து, குளோரின் கலந்த பாது காப்பான தண்ணீரையே பருகவும்.

பரிந்துரைக்கப் பட்ட பாது காப்பான பாதை களையே உபயோகி க்கவும், வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும்.

வெள்ளத் தால் அடித்து செல்லப் பட்ட சாலைகள், மண் சரிவுகள், கீழே விழுந்த மரங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின் இணைப்பு களை கவன த்தில் கொள்ளவும்.

தாழ்வான மின் கம்பிகள் அருகே செல்லக் கூடாது.

உறுதி யான காலணிகள் அணிந்து, வெட்டுக் காயங் களிலிருந்து கால்களைப் பாது காக்கவும்.

சேத மடைந்த குடிநீர் குழாய் வடிகால் அமைப்பு மற்றும் மின் இணைப்பு குறித்து, உரிய அதிகாரி களிடம் உடன் புகார் செய்யவும்.

கட்டிடத் திற்குள் வெளி காற்று புகுமாறு செய்தும், நச்சு வாயுக்கள் மற்றும் துர்நாற் றத்தை போக்கவும்.

சேதமுற்ற கட்டிடம் மற்றும் அதன் அனைத்துப் பகுதி களையும் புகைப் படம் எடுக்கவும்.

(அரசாங் கத்தால் வழங்கப்படும் வெள்ளம் பாதிப்பு நிவாரணம் பெற்றுக் கொள்ள உதவும்).

சிறிய காயங் களையோ, நோய் அறிகுறி களையோ அலட்சியப் படுத்தக் கூடாது தேவை யான மருத்துவ உதவியை உடனடி யாக நாடவும்.

எரிவாயு இணைப்பு அணைக்கப் பட்டு இருக்கு மாயின் மீண்டும் அடுப்பு பற்ற வைக்கும் முன் அதிக கவனம் தேவை.

வெள்ளப் பகுதியில் குழந்தைகள் விளை யாடுவதை தடை செய்ய வேண்டும்.

வெள்ள நீரில் நனைந்த அனைத்துப் பொருட் களையும் சுத்தப் படுத்தியும் தேவை எனில் கிருமி நீக்கியும் பயன் படுத்தவும்.

பொருட்களை பழுது நீக்கம் செய்யும் போது எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தி லிருந்து பாது காக்கும் வகையில் மேற் கொள்ளவும்.
Tags:
Privacy and cookie settings