குளங்களில் காசு போடும் பழக்கம் ஏன்?

0
பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது.
குளங்களில் காசு போடும் பழக்கம் ஏன்?
இதற்கான காரணம் என்ன வென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.
உண்மை யில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்தி ருக்கிறது. 

இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்கால த்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப் பட்டன. 

செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசிய மான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறை பாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். 

எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், 
அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர் தான் ஊர் மக்கள் எல்லாரு க்கும் குடிநீராகப் பயன் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இதே பழக்கம் நாளடை வில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடு கிறோம். 

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. 

செம்பு நீர், புற்று நோயைத் தவிர்க்கும் பண்புடைய தாக அறிவியல் உலகம் கூறுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings