இளம்பெண் எரித்துக் கொலை... ராமதாஸ் !

0
பெண்களைப் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
இளம்பெண் எரித்துக் கொலை... ராமதாஸ் !
பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபடுவோர் குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதுடன், அருகிலுள்ள காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் செய்ய பெண்கள் முன் வர வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை ஆதம் பாக்கத்தில் காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்திரு க்கிறார். 

இந்த தாக்குதலில் அப்பெண்ணின் தாயாரும், சகோதரியும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக் கின்றனர். 

காதல் விவகாரத்தில் நடந்துள்ள இந்தக் கொடூரக் கொலை பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ஆதம் பாக்கத்தைச் சேர்ந்த இந்துஜா என்ற அந்தப் பெண்ணை அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த ஆகாஷ் என்ற இளைஞர் பள்ளிப் பருவத்தி லிருந்தே காதலித்து வந்த தாகக் கூறப்படுகிறது. 
அவரைக் காதலிக்க விரும்ப வில்லை என்று அப்பெண் திட்ட வட்டமாகக் கூறி விட்ட பிறகும், அந்த இளைஞர் தொடர்ந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல் செய்து வந்துள்ளார்.

நேற்றிரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற இளைஞர், தம்மை திருமணம் செய்து வைக்கும்படி இந்துஜாவின் தாயார் ரேணுகாவிடம் தகராறு செய்துள்ளார். 

அதற்கு அவர்கள் சம்மதிக்காத நிலையில், அந்தப் பெண், அவரது தாயார் மற்றும் சகோதரி நிவேதா மீது கையோடு எடுத்துச் சென்றிருந்த எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். 

இதில் அந்தப் பெண் அந்த இடத்தி லேயே உயிரிழந்த நிலை யில், மற்ற இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

காதல் உன்னதமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், இருவர் மனதும் உடன்படும் போது ஏற்படுவது தான் காதல் ஆகும். 

காதலிக்க விரும்ப வில்லை என்று இந்துஜா கூறி விட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு தொல்லைக் கொடுத்தது அரக்கத் தனமான செயல் ஆகும். 

மனதில் சாத்தானின் குணங்கள் குடியேறிய வர்களால் தான், பெண்ணின் உணர்வு களை மதிக்காமல் இத்தகைய இழி செயல் களில் ஈடுபட முடியும்.
காதலிக்க மறுக்கும் பெண் களை தீயிட்டு எரிக்கும் கலாச்சாரம் இப்போது தான் தொடங்கி இருப்ப தாகக் கூற முடியாது. கடந்த காலங்களில் இத்தகைய கொடூரங்கள் அரங்கேற்றப் பட்டிருக் கின்றன.

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி விழுப்புரம் வ.பாளையம் கிராமத்தில் தம்மை காதலிக்க மறுத்தற் காக நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற கொடியவன் கொடூரமான முறையில் எரித்துக் கொண்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். 

இதில் பாதிக்கப் பட்ட மாணவி நவீனா பள்ளியிறுதி வகுப்பு முடித்து கல்லூரி யில் சேர காத்துக் கொண்டி ருந்தவர்.

அவரைக் கொன்ற செந்தில் என்பவன் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களுக் காக நீதிமன்றத் தால் தண்டிக்கப் பட்டவன். 

நவீனாவை பல ஆண்டு களாக பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத் ததன் மூலம் அம்மாணவி யின் படிப்பு நிறுத்தப் படுவதற்கு காரண மாக இருந்தவன். 

அவனால், அந்த மாணவி கடுமை யான பாதிப்புக்கு ஆளாகி  யிருந்த நிலை யில், அவன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருந் தால் நவீனா காப் பாற்றப் பட்டிருப் பார்.
விழுப்புரம் நவீனா மட்டு மின்றி, சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, கரூர் பொறியியல் மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கோவை தன்யா என 

கடந்த ஓராண்டில் மட்டும் ஐம்பது க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக் கின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு செல்லும் மாணவி களை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை தருவதை சிலர் வாடிக்கை யாகக் கொண்டு ள்ளனர். 

அவர்கள் மீது புகார் செய்தாலும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத தால் தான் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்யும் அளவுக்கு சில பாவிகள் செல்கி ன்றனர்.

ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற் றப்படும் பெண்க ளுக்கு எதிரான வன்முறை களை கட்டுப் படுத்த அரசு எந்த நடவடி க்கையும் எடுக்க வில்லை என்பது கவலை யளிக்கிறது. 

அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடரு கின்றன. புற்று நோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.
பெண்களைப் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல் களில் ஈடுபடு வோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். 

இதற்காக மகளிரைக் கொண்ட தனிக்காவல் பிரிவு ஏற்படுத் தப்பட வேண்டும். தேவைப் பட்டால் தனிச் சட்டமும் இயற்றப்பட வேண்டும்.

இதற்கெல் லாம் மேலாக பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபடுவோர் குறித்து பெற்றோரிடம் தெரிவிப்ப துடன், அருகிலுள்ள காவல் நிலையத் திலும் முறைப்படி புகார் செய்ய பெண்கள் முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings