ரஷ்யாவில் குண்டு வெடித்து 10 பேர் காயம் !

0
ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான புனித பீட்டர்ஸ் பர்க்கில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இது நிகழ்ந்தது. 
ரஷ்யாவில் குண்டு வெடித்து 10 பேர் காயம் !
மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள வடகிழக்கு பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவுக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காய மடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இவர்கள் மருத்துவ மனையில் ேசர்க்கப் பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை யடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்பகுதியில் இருந்த வர்கள் பாதுகாப்பாக அப்புறப் படுத்தப் பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் பல்பொருள் அங்காடியில் அடையாளம் தெரியாத பொருள் வெடித்துள்ளது. 

இது எந்த வகை வெடிபொருள் என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings