ரெயில்வே அமைச்சகம், ‘ரெயில்–2018’ என்ற திட்டத்தை செயல் படுத்த உள்ளது. இது, மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டமாகும்.
இந்த பெட்டிகளை தயாரிக்க முதலில் சர்வதேச டெண்டர் விடப் பட்டது. ஆனால், அது நல்ல பலன் அளிக்காத தால்,
சொந்த மாகவே அப்பெட்டி களை தயாரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, சென்னை ரெயில் பெட்டி தொழிற் சாலையில் இப்பெட்டி கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.
இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ரவீந்திர குப்தா கூறுகை யில்,
முதன் முறையாக இந்தியா விலேயே தயாரிக்கப் பட்ட மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் நவீன ரெயில் டிசம்பர் 2018-ல் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரெயில் பெட்டிகள் போன்று இருக்கைகள் காணப்படும். பயணி களிடம் இருந்து வரவேற்பை பொறுத்து சிலிப்பர் வசதி கொண்ட பெட்டிகள் அறிமுகப் படுத்தபடும்.
ரெயில் நிலையங் களில் ரெயில் நிற்கும் போது, கதவுகள் திறந்து மூடும் வகையில் தானியங்கி வசதி பொருத் தப்படும். சன்னல்கள் பெரிதாக இருக்கும். பெட்டிகள்,
முற்றிலும் ஏ.சி. வசதி கொண்ட தாக இருக்கும். பசுமை கழிப்பறைகள் இடம் பெற்று இருக்கும். ஒரு பெட்டியில் இருந்து மற்ற பெட்டி களுக்கு எளிதில் சென்றுவர முடியும்.
இதன் முதன் ரெயில் சேவை டெல்லி – லக்னோ பாதையிலோ அல்லது டெல்லி – சண்டிகார் பாதையிலோ இயக்கப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments