2ஜி அலைக் கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டது குறித்து தலைவர் கருணாநிதி யிடம் கூறியதும்
கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி யுள்ளார்.
2ஜி அலைக் கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து
சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்ட த்தில் ஈடுபட்டனர்.
மேலும், மு.க. ஸ்டாலின் அனை வருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினார்.
தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழ கனுடன் கோபாலபுரம்
இல்லத்து க்குச் சென்ற ஸ்டாலின், தலைவர் கருணாநிதி யிடம் தீர்ப்பு விவரங் களை தெரிவித்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
''அநீதி வீழும், அறம் வெல்லும் என்று தலைவர் கருணாநிதி ஏற்கெனவே 2ஜி வழக்கு பற்றி ஒரே வரியில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி, இன்றைக்கு வழங்கப் பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பின் மூலம் அநீதி வீழ்ந்தி ருக்கிறது, அறம் வென்றி ருக்கிறது.
நானும், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனும், தலைவர் கருணாநிதி யிடம் தீர்ப்பு விவரங் களை தெரிவி த்தோம்.
மிகுந்த மகிழ்ச்சி யோடு பேராசிரி யரிடமும், என்னிடமும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
திமுகவு க்கு எதிரான பல கட்சிகள் மட்டுமல்ல, பல்வேறு ஊடகங் களும் இணைந்து,
திட்ட மிட்டு திமுகவை களங்கப் படுத்த எல்லா முயற்சி களிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றனர்.
அதற்கு உதாரண மாக கடந்த நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக் காட்ட முடியும். ஆனால், இன்றைக்கு அது முறியடிக் கப்பட்டு இருக்கிறது.
எந்த வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப் படவில்லை. திமுகவை களங்க மற்றது என்பது தீர்ப்பின் மூலமாக வெளியாகி யுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இந்த தீர்ப்பு எதிரொலிக் குமா என்று கேட்கப் படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களைப் பொறுத்த வரை இந்த தீர்ப்பு வெளியா வதற்கு முன்பாகவே,
ஆளுங் கட்சியாக இருந்தாலும், அதே போல அதிலிருந்து பிரிந்துள்ள இன்னொரு அணியாக இருந்தாலும்,
அனைவரும் டெபாசிட் தொகையை இழக்கும் நிலையில் தான், 24 ஆம் தேதியன்று வெளியாக வுள்ள தேர்தல் முடிவு இருக்கும்.
எனவே, தீர்ப்புக்கும் தேர்தல் முடிவுக் கும் தொடர் பில்லை'' என்று ஸ்டாலின் கூறினார்.
Thanks for Your Comments