கோவை ஆர்.எஸ். புரத்தில் தங்க நகை பட்டறையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இந்த விபத்து நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "நகைக் கடையில் நகை தயாரிக்கும் போது தங்கத்தை சுத்தப் படுத்துவற் காக ஒருவித வேதிப் பொருளைப் பயன்படுத்து கின்றனர்.
அந்த வேதிப் பொருளுடன் தங்கத் துகள்களும் சேர்ந்து வெளியேறும். அவை அங்கு அமைக்கப் பட்டுள்ள தொட்டிக்கு செல்லும்.
6 மாதத்துக்கு ஒரு முறை இந்தத் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரில் இருந்து தங்க துகள்களை பிரித்து சேகரிப்பது வழக்கம் எனக் கூறப் படுகிறது.
அதன்படி நேற்று (வியாழக் கிழமை) நள்ளிரவு தொட்டியை சுத்தம் செய்வதற் காக கவுரிசங்கர் (21), ஏழுமலை (23), ராதா கிருஷ்ணன் (28) ஆகியோர் சென்று ள்ளனர்.
மூன்று பேரும் தொட்டியை சுத்தப்படுத்த தொடங்கினர். முதலில் தண்ணீரை வெளியேற்றி யுள்ளனர். பின்னர், தொட்டி க்குள் இருக்கும் தங்கது கள்களை பிரித்து எடுக்க முயன்றனர்.
முதலில், கவுரிசங்கர், ஏழுமலை ஆகிய இருவரும் தொட்டிக்குள் இறங்கினர். அப்போது எதிர் பாராத விதமாக விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர்.
வெகுநேரம் ஆகியும் இருவரும் வெளியே வரவில்லை. ராதா கிருஷ்ணன் தொட்டியை பார்த்த போது இருவரும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து சத்தம் போட்டார்.
அப்போது அங்கு காவல் பணியில் இருந்த முருகன் என்பவர் இரண்டு தொழிலாளி களையும் மீட்க முயன்றார்.
ஆனால், அவரும் தொட்டியில் மயங்கி விழுந்தார். பின்னர், தீயணைப்புத் துறை யினர் வந்து மூன்று தொழிலாளர் களையும் மீட்டனர்.
ஆனால், கவுரிசங்கர், ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காவலர் முருகன் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் இறந்தார்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments