வடகொரியாவை சேர்ந்த 4 கப்பல்கள் சர்வதேச துறை முகங்களுக்கு செல்வதற்கு ஐநா தடை விதித்துள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை களை நடத்தி வருகிறது.
இதற்காக, இந்நாட்டின் மீது ஐநா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
எனினும், இதை பொருட் படுத்தாமல் தொடர்ந்து அணு ஆயுத சோதனை களை செய்து வருவதால், கடந்த ஆகஸ்ட் மாதம் நிலக்கரி, கடல்சார் உணவுகள், இரும்பு தாதுக்களை ஏற்றுமதி செய்ய வடகொரியாவுக்கு ஐநா தடை விதித்தது.
இந்நிலையில், தடையை மீறி வடகொரியா வுக்கு பொருட் களை ஏற்றி வந்த 4 சரக்கு கப்பல்கள் சர்வதேச துறை முகங்களுக்கு செல்வதற்கு கடந்த அக்டோரில் ஐநா தடை விதித்தது.
பெட்ரெல் 8, ஹாவோ பான் 6, டோங் சான் 2, ஜி சுன் ஆகிய 4 வர்த்தக கப்பல் களும் உலக நாடுகளின் எந்த துறை முகத்துக்கும் செல்லக் கூடாது என ஐநா உத்தர விட்டது.
ஐநா.வின வரலாற்றில் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டது அதுவே முதல்முறை.
இந்நிலை யில், வடகொரியா வுக்கு தடை விதிக்கப்பட்ட பொருட் களை ஏற்றி செல்வதாக சந்தேகிகப் படும் மேலும் 4 கப்பல் களுக்கு ஐநா நேற்று முன்தினம் மீண்டும் தடை விதித்துள்ளது.
இந்த நான்கு கப்பல் களும் சர்வதேச துறைமுகங் களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இவை, இந்த கப்பல்கள் பல்வேறு நாடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளன.
அமெரிக்கா கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை ஐநா எடுத்துள்ளது. இதன் மூம், வடகொரியா வுக்கு பொருட்களை ஏற்றி வந்ததால் தடை விதிக்கப் பட்ட கப்பல்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந் துள்ளது.
இந்நிலை யில், தென்கொரியா வில் உள்ள யெசூ துறை முகத்திற்கு கடந்த அக்டோபர் 11ம் தேதி தைவான் நிறுவனத்து க்கு சொந்தமான, ‘லைட்ஹவுஸ் வின்மோர்’ என்ற கப்பல் வந்துள்ளது.
ஜப்பானில் இருந்து 600 டன் சுத்திகரிக்கப் பட்ட பெட்ரோலிய பொருட் களை ஏற்றிக் கொண்டு துறை முகத்தில் இருந்து இது புறப்பட்டு சென்றுள்ளது. மீண்டும் கடந்த நவம்பர் 24ம் தேதி துறைமுகம் திரும்பி யுள்ளது.
அப்போது, தென்கொரியா சுங்க அதிகாரிகள் கப்பல் ஊழியர் களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், இந்த கப்பல் தைவானுக்கு செல்வதற்கு பதிலாக சர்வதேச கடல் பகுதியில் வடகொரியாவின் கப்பலுக்கு எண்ணெயை மாற்றி விட்டு வந்தது தெரிய வந்தது.
இதை யடுத்து, அந்த கப்பலை சிறிது நேரம் சிறைபிடித்த தென்கொரியா, பின்னர் விடுவித்தது.
வடகொரியா வுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்த ஹாங்காய் கப்பலையும் தென்கொரியா சிறை பிடித்தது.
தடை போட்டால் என்ன? வடகொரியா கோல்மால்
ஐநா விதித்துள்ள தடையால் தனக்கு ேதவையான கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட் களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை வடகொரியா வுக்கு ஏற்பட் டுள்ளது.
ஆனால், இந்த பிரச்னையை சட்ட விரோத மான முறையில் இது சமாளித்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து புறவாசல் வழியாக தேவை யான பொருட்களை வாங்கும் வடகொரியா, அந்த கப்பல்கள் நடுக்கடலில் வரும் போதே தனது நாட்டு கப்பல்களை அங்கு அனுப்பி, நடுக்கடலில் அந்த பொருட்களை எடுத்து வந்து விடுகிறது.
இந்த தில்லுமுல்லு இப்போது வெளிச் சத்துக்கு வந்துள்ள தால், அதை தடுக்க ஐநாவும், அமெரிக்கா வும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
Thanks for Your Comments