மேகாலயா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏ க்கள் நேற்று ராஜினாமா செய்தனர். மேகாலயாவில் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
60 உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநில சட்டப் பேரவையில் காங்கிரஸின் பலம் 30 ஆக இருந்தது. முதல்வர் முகுல் சங்மாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வந்த அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பி.என்.
சயீம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான ரோவெல் லிங்டா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.
இதனால் சட்டப் பேரவை யில் காங்கிரஸ் கட்சியின் பலம் 24 ஆக குறைந் துள்ளது. ராஜினாமா செய்த 5 எம்எல்ஏக்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேகாலயா சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடை வாகவே கருதப் படுகிறது.
எனினும், 9 சுயேச்சைகளின் ஆத ரவு இருப்ப தால் அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. மேற் குறிப்பிட்ட 5 காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் தவிர, ஐக்கிய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ ஒருவரும், சுயேச்சை எம்எல்ஏ க்கள் இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர்.
Thanks for Your Comments