நடிகர் விஜய்யிடம் பண மோசடியில் ஈடுபட்ட நாகராஜ் என்பவர் தற்போது போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
இவர் முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் ரோசைய்யாவின் பேரன் என கூறி வலம் வந்தவர். மேலும் தான் சினிமா பைனான்சியர் என கூறி சில முன்னணி இயக்குனர் களுடன் நெருக்க மாக இருந் துள்ளார்.
விஜய்யின் தலைவா படம் வெளியாக சிக்கல்களை சந்தித்த போது ஆளுநர் ரோசய்யா மூலம் படம் வெளியிட அனுமதி பெற்று தருவதாக கூறி
விஜய்யிடம் ரொக்கமாக 50 லட்சம் ருபாய் பெற்றுக் கொண்டு நாகராஜ் கம்பி நீட்டி விட்டார்.இந்த மோசடி பற்றி இது நாள் வரை விஜய் வெளியில் சொல்ல வில்லை என்றாலும்,
தற்போது வேறொரு வழக்கில் கைதாகியுள்ள நாகராஜ் மூலம் இந்த உண்மை வெளிச் சத்துக்கு வந்துள்ளது.
Thanks for Your Comments