ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை அதிமுக வினர் பணப்பட்டு வாடாவில் ஈடுபட்ட தாக புகார் எழுந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் மறைவிற்கு பின்னர் தள்ளிப் போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக் கான இடைத் தேர்தல் நாளை மறுதினம் (டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்த இடைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங் கட்சியான எடப்பாடி அணியினரும்,
ஆளுங் கட்சியை எப்படி யாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர் கட்சியான திமுகவும்,
சுயேச்சை யில் போட்டி யிடும் டிடிவி தினகரனும் மற்றும் இதர சுயேச்சை வேட்பாளர் களும் தீவிர பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நிலை யில், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆர்.கே.நகர் வாசிகளுக்கு ரூ.6 ஆயிரத்தை அதிமுக வினர் வழங்கியதாக புகார் எழுந்தது.
மொத்தம் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை அன்றே பணப் பட்டுவாடா செய்து முடிக்கப் பட்டதாக கூறப் படுகிறது.
இந்நிலையில், வெளியூர் சென்ற தாலும், வேறு சில காரணங் களாலும் தங்களு க்கு அதிமுக கொடுத்த ரூ.6 ஆயிரம் தங்களுக்கு கிடைக்க வில்லை
எனக்கூறி 100 க்கும் மேற்பட்டோர் காசிமேட்டில் உள்ள அதிமுக பணிமனையை நேற்று முற்றுகை யிட்டனர். அங்கிருந்த அதிமுக வினரிடம் அவர்கள் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
எனவே, அங்கிருந்த நிர்வாகிகள், பணம் பட்டுவாடா செய்பவர் களின் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்களை அவர்களிடம் கொடுத்து,
அவர்களிடம் பேசும் படிக் கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர் எனக் கூறப் படுகிறது.
Thanks for Your Comments