குடிபோதை ஆசாமிகள் வாகனம் ஓட்டி மரணம் ஏற்பட்டால் இனி கொலை யாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
குடித்து விட்டு வண்டி ஒட்டினால் டிரன்க் அண்ட் டிரைவ் என வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப் படும்.
அப்படி இருந்தும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. சென்னையில் இது போன்ற விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இனி குடிபோதை யில் வாகனம் ஓட்டி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால், வண்டி ஓட்டிய வருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்க பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர ஆய்வு செய்வதற்காக வினய்.பி.சகஸ்ரபுத்தே தலைமை யில் 24 உறுப்பினர் களைக் கொண்ட பார்லிமென்ட் குழு அமைக்கப் பட்டது.
இந்த குழுவானது பல முக்கிய பரிந்துரை களை மத்திய தரைவழிப் போக்கு வரத்து துறை அமைச்ச கத்திற்கு அளித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் காலாவதி யானால், அவற்றை புதுப்பிப்ப தற்கு (License Renewal) காலாவதி தேதிக்கு முன்பும் பின்பும் ஆறு மாதம் வரை அனுமதி அளிக்கலாம்.
அது போலவே, குடித்து விட்டு வாகனம் ஓட்டு பவர்களுக் கான சிறைத் தண்டனையை 7 ஆண்டு களாக உயர்த்த லாம்.
புதிய வாகனங் களை விற்பனை செய்யும் முகவர்களின் இடத்திலேயே (Show Room) பதிவு செய்யலாம். இதனால் வாகனத்தை பதிவு செய்வதல் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப் படும்.
போக்குவரத்து போலீசார் அணியும் உடைகளில் கண்காணிப்பு கேமராக் களை பயன்படுத்தலாம். இவற்றை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கொண்டு கண்காணிக்கலாம்.
இதனால் லஞ்ச ஊழல் குற்றங்கள் குறையும். நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தை களின் பாதுகாப்பி ற்கு தேவை யான சட்ட விதிகளை அமல் படுத்தலாம்.
500 கிமீக்கு மேற்பட்ட தூரங் களுக்கு செல்லும் கனரக வாகனங் களில் இரு ஓட்டுநர்கள் கட்டாயம் இருக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யலாம்.
அது போலவே, வாகன போக்குவரத்தை கண்காணிக்க ஸ்பீடு கேமாரா, சிசிடிவி ஸ்பிடு கேமரா மற்றும் ஸ்பீடு கன், உடலில் அணியும் கேமராக்களை பயன் படுத்தலாம்.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் சட்ட வடிவம் பெறும்போது கூட்டாட்சித் தத்துவம் மேலும் வலுப்பெறும்.
இவ்வாறு அந்தக் குழுவானது தன்னுடைய அறிக்கை யில் குறிப்பிட் டுள்ளது. இதெல்லாம் சரிதான்.
எல்லா டாக்குமென்டும் சரியா இருந்தாலும், ஏதாவது ஒரு நொட்டையை கண்டு பிடித்து எப்படி யாவது பணத்தை புடுங்க வேண்டும்
என்று நினைக்கும் போக்கு வரத்து போலீசாரை தண்டிக்க என்ன சட்டம் கொண்டு வருவது
என்று வாகன ஓட்டுநர்கள் முணு முணுப்பது மத்திய அரசின் காதில் விழுமா?
Thanks for Your Comments