கடனுக்காக 7 கோடி வீட்டை விற்றேன் – பார்த்திபன் அனுபவம் | I sold 7 crores for debt - Parthiban experience !

0
கந்து வட்டிக் கொடுமை காரண மாகத் தயாரிப்பாளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.


அவரின் தற்கொலை க்குக் காரண மான சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக் கின்றனர்.

சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமாரின் இந்தத் தற்கொலை சினிமா பிரபலங் களிடையே பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கும் 

நிலையில் நடிகர் பார்த்திபன், அசோக்குமார் இறப்பு சம்பந்த மாக ஒரு வாய்ஸ் மெஜேஸ் அனுப்பி யிருக்கிறார்.

‘அன்பு நிறைந்த தயாரிப்பாளர் களுக்கு வணக்கம். அன்பு மட்டுமே நம்மை இணைக்கும் சக்தியாக இருக்கும். 

அசோக் குமாரின் மரணம் நம்ம சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்து விட்டு போயிருக் கிறது.

மனம் பிணமாய் கணக்கிறது. அசோக்குமார் போன்ற எமோஷனலாய், சென்ஸிடி வாக முடிவு எடுக்கக் கூடிய 

மென்மை யான மனிதர்கள் இனி இங்கே ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்தக் கொலை ஒரு எடுத்துக்காட்டு.

இந்த நிலை தொடர்ந்தால் கந்து வட்டி மட்டுமே இங்கு ஜீவிக்கும். வெறும் கெட்ட வர்கள் மட்டுமே இங்கே ஜீவிப்பார்கள்.

இவர்கள் வட்டி வசூலிக்கும் முறை ரொம்பக் கொடுமை யானது தண்டனைக் குரியது. 

அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பிரச்னையி லிருந்து நாம் எப்படி வெளியே வர வேண்டும் 

என்பதைத் தான் இப்போது முதலில் யோசிக்க வேண்டும். இதில் இன்னொரு விஷயம் இருக்கு. 

நண்பர்கள் கூட கஷ்டப் படும் வேளை யில் நமக்கு உதவி செய்வ தில்லை.

இந்த வட்டிக்கு விடுபவர்கள் தான் உதவு வார்கள். எங்க அம்மாவின் தாலியை அடகு வைக்க வில்லை என்றால் நான் படித்து இருக்க முடியாது.

என்னை மாதிரி நிறைய பேரும் இந்த அடகு கடைகள், வட்டிக் காரர்களிடம் அவசரத்து க்குப் 

பணம் கேட்டு வாங்கி நிறைய நேரங்களில் அவர்களின் வாழ்க்கையை ஓட்டி இருக்கி றார்கள்.

ஆனால், இப்படித் தப்பான, கொடியவர் களிடம்தான் பணம் வாங்குறோம் என்ற நிலையைப் புரிந்து கொண்டு 

அதை வாங்காமல் இருக்க என்ன பண்ணுவது. ஒரு வேளை வாங்கி விட்டால் என்ன பண்ணுவது என்று யோசிக்க வேண்டும்.

உதாரணத் துக்கு, வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளரசவாக்க த்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள என் பங்களாவை விற்றேன்.

இன்று அதன் மதிப்பு ஏழு கோடி ரூபாய். வாங்கிவிடலாம், இன்னும் சரியான படம் பண்ணுனா நாளைக்கே வாங்கி விடலாம் என்று நினைத்து இன்றுடன் 13 வருஷம் ஆகி விட்டது.

இப்பவும் என் வாழ்க்கை யில் பெரிய தவறாக நினைப்பது அதைத் தான். ஆனால், 

மனசில் என்ன சந்தோஷம் என்றால், ‘யாருக்கும் நம்ம 10 பைசாகூட பேலன்ஸ் வைக்க வில்லை” என்பதுதான்.

சமீபத்தில் சேரன், ”ஆபீஸைக் காலிபண்ண வேண்டிய சூழ்நிலை” என்றார். நான் உடனே ராத்திரி அவருக்கு போன் பண்ணிச் சொன்னேன்.

என் அலுவலக த்தைப் பயன் படுத்திக் கொள்ளுங் கள்னு. இதைத் தற்பெருமைக் காகச் சொல்ல வில்லை.

நான் இருப்பதே திருவான்மி யூரில் வாடகைக்குத் தான். இதுவும் நண்பருக்கு நண்பர் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான். நாம் இன்று சொல் கிறோம்.

”எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சங்கத்து க்கு வாங்க தீர்த்து வைக்கிறோம் ’னு. ஒரு மனிதன் பிரச்னையில் இருக்கும் போது 

தீர்த்து வைக்க முடிகிறதா என்பது கேள்விக் குறியாகத் தான் இருக்கிறது. அந்த நேரத்தில் யார் உதவி செய்ய முன் வருகிறார் என்பது தெரியாமல் தான் இருக் கிறது.

ரொம்ப வருடங் களுக்கு முன்பு மதுரையில் அதிக கந்துவட்டி பெரிய பிரச்னை யாக இருக்கும் போது, 

ஒரு கிராமத்தில் சின்னப் பிள்ளைனு ஓர் அம்மா இந்தக் கந்து வட்டிப் பிரச்னை யிலிருந்து 

அந்தக் கிராமத்தைக் காப்பாற்று வதற்காகச் சிறுகச் சிறுகப் பணத்தை 10 பேரிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி 

அதிகமான பணத்தை வாங்கிய கந்து வட்டிக்காரர் களிடம் கொடுத்து விட்டு, தான் 

உழைத்து உழைத்து அவங்க வாங்கிய வட்டிக் கடனை ஈடு செய்து கொண்டிருந் தார்கள்.

இதற்காக அப்போது இருந்த பாரதப் பிரதமர் அந்தச் சின்னப் பிள்ளை காலைத் தொட்டு வணங் கினார்.

அப்போது தான் உலக அழகினு ஐஸ்வர்யா வைத் தேர்ந்தெடுத்த காலம். அந்தச் சின்னப் பிள்ளை அம்மாவை நான் சென்னைக்கு வர வழைத்து இவங்க தான்


உலக அழகினு சின்னப் பிள்ளை அம்மாவுக்கு கிரீடம் எல்லாம் சூட்டினேன். 

அவ்வளவு பெரிய விஷயத்தை சாதித்து இருக்காங்க இந்தப் பெண்மணி.

இவ்வளவு பெரிய சங்கங்கள், வசதிகள் உள்ளவங்க நினைத் தால் இதைச் செய்ய முடியாதா… நிச்சய மாகச் செய்ய முடியும்.

அது அப்படித் தான், ஒப்பாரி வைப்பதற் காக வேண்டும்னா நம்ம கூட்ட மாகக் கூட முடியும்.

இப்போது நான் கூட ஒரு சிரமத்தில் இருக்கிறேன் என்றால் அந்தச் சிரமத்தைப் போய் சினிமா

சம்பந்தப் பட்டவர் களிடம் போய் பேசுவதற்கு இன்னும் சிரமாக இருக்கிறது.

யாரும் உதவி செய்வதற்கு முன் வர மாட்டார்கள். ஒரு பக்கம் இந்த மாதிரி. வட்டிக்குப் பணம் வாங்கி நம்ம கொடுக்க முடியாமல் 

நம்மளை அசிங்கப் படுத்தி, அவமானப் படுத்தி அந்த அவமானத் தில் தற்கொலை பண்ணிக் கொள்கிற நிலைமை.

என்னுடைய படத்தை வெளியிட்ட வகையில் திருச்சியி லிருந்து 4.5 லட்சம் ரூபாய் வரணும். 10 மாதமாகப் போராடி ஒரு லட்சம் ரூபாய் வந்திருக்கு.

இன்னும் மூன்று லட்சம் ரூபாய் வருமா என்பது தெரிய வில்லை. இதற்காக நான் வட்டி கட்டிக்கொண்டி ருக்கிறேன்.

ஆனால், என் பணத்தை வாங்கி விட்டு கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை அவங்க அதை இழுத்தடித்துக் கொண்டே இருக்குறாங்க.

இதைச் சங்கத்தாலும் தீர்க்க முடிய வில்லை. ஒருத்தன் பணத்தைக் கொடுத்து விட்டு நம்மள டார்ச்சர் பண்ணுறான் 

இன்னொ ருத்தன் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு நம்ம பணத்தைத் தரமால் இழுத்தடிக் கிறான்.

பிரச்னைகள் நெருக்கடி கொடுக்கும் போது ஒரு மனிதனால் மீளவே முடிய வில்லை. 

நமக்கு ஒரு தைரியம் நம்ம நேற்று ஒன்றும் கொண்டு வர வில்லை. நாளைக்கு நம்ம எடுத்துப் போகப்போறதும் இல்லை என்று.

இன்னைக்கு இரவு 2 மணிக்கு எழுந்து யோசித்துக் கொண்டிரு க்கிறேன். 

அதனால் கந்து வட்டி பிரச்னையி லிருந்து நம்ம தப்பிக்க ஒரே வழி நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிற கூட்டுறவு அமைப்பு.

அந்த அமைப்பி லிருந்து ஒருவ ருடைய சிரமத்துக்கு இன்னொருவர் எப்படி உதவலாம் என்று யோசிக்க வேண்டும். 

ஒருத்தன் நல்லா இருந்தால் மட்டுமே அந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியும்.

இல்லை யென்றால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது. 

அதனால் இந்தக் கந்துவட்டி கொடுமை யிலிருந்து நம்ம வெளியே வர நம்ம எல்லோரும் சேர்ந்து பேசி ஏதாவது ஒரு முடிவுக்கு வரணும். 


இனியாவது இந்த மாதிரி ஒரு பலி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லி யிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் மற்றும் எம்.எல்.ஏ கருணாஸும் ஓர் அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். 

அதில், ‘கந்து வட்டிக்கு எதிராகக் குரல் கொடுத்தி ருக்கிறார். மேலும், ஃபைனான்ஸியர் அன்புச் செழியனை உடனே கைது செய்ய வேண்டும். 

அரசும் கந்து வட்டியின் வாயி லாகத் தொடர்ந்து நடந்து வரும் கொடுமை களைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings