ஆதார் அட்டை கேட்டு மருத்துவமனை நிர்வாகம் பிடிவாதம் பிடித்ததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது தாயை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று ள்ளார் பவன் குமார் என்பவர்.
ஆனால் ஆதார் அட்டை இல்லாமல் அங்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ மனை நிர்வாகம் மறுத்ததாகத் கூறப்படுகிறது.
இதை யடுத்துத் தனது செல்பேசியில் படம் பிடித்து வைத்திருந்த தாயின் ஆதார் அட்டையைக் காட்டிய பவன்குமார்,
ஒரு மணி நேரத்தில் உண்மையான ஆதார் அட்டையை எடுத்து வருவதா கவும் தெரிவித் துள்ளார்.
அதன் பிறகும் உண்மை யான ஆதார் அட்டை கொண்டு வந்தால் தான் சிகிச்சை எனக் கூறி மருத்துவ மனை நிர்வாகம் தாமதப் படுத்திய தால் பவன் குமாரின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் கார்கில் பெண் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி என்பது தெரிய வந்துள்ளது.
ராணுவ வீரர் குடும்பத்திற்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் நிலையை என்னிப் பாருங்கள் என நோயாளி களின் உறவினர்கள் கேள்வி யெழுப்பினர்.
இது குறித்து பவன் குமார் மருத்துவ மனை நிர்வாகத்தின் மீது புகார் செய்தார்.
இந்தக் குற்றச் சாட்டை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சைக்கு ஆதார் அட்டை கட்டாய மில்லை என்றும்,
ஆதார் அட்டை இல்லை என்பதற்காக யாருக்கும் சிகிச்சை அளிக்க மறுக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments