ஜெயலலிதா மறைந்ததை யடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடை பெறுகிறது.
இதில் ஆளுங்கட்சி யான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடு கின்றனர்.
இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜெ.தீபா, கலைக் கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர்.
இந்நிலை யில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவரு மான விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ள தாக கூறி உள்ளார்.
அவர் தேர்தலில் போட்டி யிடுவது தொடர்பாக பல்வேறு தரப்பில் வெவ்வேறு பதில்கள் தெரிவிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலை யில் அண்ணா அறிவால யத்தில் செய்தியாளர் களிடம் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம், நடிகர் விஷால்
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பட்ட தற்கு
அவர் பதிலளிக்கை யில், வாக்குரிமை பெற்றிருக்க கூடிய யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்பதற்கு உரிமை உண்டு என்பது தான் எனது கருத்து என்றார்.
Thanks for Your Comments