ஜீவா - ஷாலினி பாண்டே நடிக்கவுள்ள புதிய படத்திற்கு 'கொரில்லா' என பெயரிட்டு இருக்கிறார்கள். மேலும், இதில் முக்கிய கதா பாத்திரத்தில் ஒரு சிம்பன்சியும் நடிக்க வுள்ளது.
'கீ' மற்றும் 'கலகலப்பு 2' படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற் காக பல்வேறு இயக்குநர் களிடம் கதைகள் கேட்டு வந்தார் ஜீவா. இதில் டான் சாண்டியின் கதை பிடித்து விடவே நாயகனாக நடிக்க ஒப்பந்த மானார்.
நாயகியாக ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகி யுள்ளார். இப்புதிய படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிக்க வுள்ளார்.
கொள்ளை யடிப்பதைப் பின் புலமாகக் கொண்ட காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு 'கொரில்லா' என பெயரிட்டுள்ளார்கள். இதில் ஜீவாவுடன் ஒரு சிம்பன்சியும் நடிக்க வுள்ளது.
இந்திய சினிமாவில் முதல் முறையாக பயிற்சியளிக்கப் பட்ட ஒரு சிம்பன்சியை வைத்து படமாக்க வுள்ளார்கள்.
இந்த சிம்பன்சி தாய்லாந்தில் புகழ்பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்று விக்கப்பட்டது.
இப்பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சி பெற்ற சிம்பன்சிகள் தான் 'ஹேங்ஓவர்-2' மற்றும் 'ப்ளேனட்ஸ் ஆஃப் தி ஏப்ஸ்' போன்ற ஹாலிவுட் படங்களில் பயன் படுத்தப் பட்டன.
சின்பன்சி நடிக்கவுள்ளது குறித்து இயக்குநர் டான் சாண்டி கூறியிருப்ப தாவது:
சிம்பன்சிகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவை. அவை எப்போதும் புன்னகையுடன் இருப்பவை, குறும்பானவை.
இது பெரும்பாலான பார்வையாளர் களைக் கவர்ந்து விடும். இதையே அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கி யுள்ளேன்.
இப்படத்தில் சிம்பனன்சி, ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேக மாக ஒரு சிம்பன்சி 4 மாதங் களாக தயார் படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சிம்பன்சி பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் ரசிகர் களுக்கு பிடிக்கும். குறிப்பாக குழந்தை களுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.
இசையமைப் பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ரூபன், கலை இயக்குநராக ஆர்.கே. நாகு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க வுள்ளது.
Thanks for Your Comments