ஜப்பான் நாட்டின் கனசவா பல்கலைக் கழகத்தின் (Kanazawa University) ஆராய்ச்சி யாளர்கள்,
குளிர்களி ( ice-cream) உருகி விடாமல் அதன் உருவத் தினை பராமரிக்கும் ஒரு வழியினை கண்டு பிடித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின், கனசவா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள், அறை வெப்ப நிலைக் கேற்ப,
மூன்று மணிநேரம் வரை உருகாது, அதன் உருவத்தினை பராமரிக்கும் குளிர்களி யைக் கண்டு பிடித்துள் ளனர்.
பரிசோதனை யில் தலைமுடி உலர்த்தும் கருவி மூலம் சூடான காற்றினை வீசச் செய்த போதும்கூட குளிர்களி உருக வில்லை. ஐந்து நிமிடம் சுடுகாற்று பட்டும் கூட குளிர்களி உருமாற வில்லை.
இது எவ்வாறு சாத்திய மாகும் என ஆராய்ந்ததில் குளிர்களி யில் சேர்க்கப் பட்ட பாலிபி னால் என்ற திரவம் தான் காரணம் என விஞ்ஞானிகள் விளக்க மளித்து ள்ளனர்.
செம்புற்றுப் பழங்களி லிருந்து (Strawberries) பிரித்தெடுக்கப் பட்ட பாலிபினோல் திரவத்துடன் குளிர்களி தயார் செய்யப் பட்டுள்ளது.
பாலிபினோல் திரமானது, நீர் மற்றும் எண்ணெயை பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொள்ளும் தன்மையினை கொண்டுள்ளது என கனசவா பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான டோமிஹீசா குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகை குளிர்களியானது சொக்லேட், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி எனப் பல்வேறு சுவை மணங்களில் (flavour) கிடைக் கின்றமை குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments