தன்னுடைய நடிப்பு ஆசையை ‘டிராபிக் ராமசாமி’ படம் நிறைவேற்றி யுள்ளதாக அம்பிகா தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து, அவர் பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிக்கிறார்.
விஜய் விக்ரம் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அம்பிகா, நிறைய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளேன்.
ஆனால், செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசையை இந்தப் படம் தான் நிறை வேற்றி வைத்துள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தேன்.
கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் படத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் அம்பிகா.
Thanks for Your Comments