விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு !

0
ஜெயலலிதா மரணம் அடைந்த தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு !
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். 

அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தி ருந்தனர். 

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர் பார்க்கப் பட்டது.

ஆனால் நேற்று மதியம் திடீரென புற்றீசல் போல சுயேட்சை வேட்பாளர்கள் படை யெடுத்து வந்தனர். 

தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவல கத்தில் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததால் 
சலசலப்பும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களை உட்கார வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி ஏற்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் திரண்ட தால் தேர்தல் அதிகாரி களும், போலீசாரும் திண றினார்கள். 

இதைத் தொடர்ந்து மனுதாக்கல் செய்ய வந்த வர்களின் பெயர்களை குறித்துக் கொண்டு டோக்கன் போன்று வரிசை எண்களை கொடுத்தனர்.

அந்த சமயத்தில் நடிகர் விஷால், ஜெ.தீபா மனு தாக்கல் செய்ய வந்தனர். 

அவர்களும் சுயேட்சைகள் தான் என்பதால் அவர்கள் முன்னதாக மனுதாக்கல் செய்யும் வகையில்

சலுகைகள் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. 

இதை யடுத்து நடிகர் விஷாலுக்கு 68-வது எண்ணும், ஜெ.தீபாவு க்கு 91-வது எண்ணும் வழங்கப் பட்டது.

மதியம் 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக கதவு மூடப்பட்டது. 

பிறகு பதிவு எண் வரிசைப்படி ஒவ்வொரு வராக அழைக்கப் பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 
நடிகர் விஷால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்கள் அனைத்தை யும் வாங்கி முடிக்க இரவு 9.45 மணியாகி விட்டது. 

அதன் பிறகு மொத்தம் எத்தனை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன என்று கணக் கிடப்பட்டது. 

145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது இரவு 10 மணிக்கு தெரிய வந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 115 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது. 

தமிழக இடைத் தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தது சாதனை யாக கருதப் படுகிறது.

அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரி களை திணற வைத்து விட்டனர். 
கடைசி நிமிடத்தில் இவ்வளவு சுயேட்சைகள் வந்ததில் அரசியல் சூழ்ச்சி பின்னணி யாக இருக்கலாம் என்று அரசியல் வட்டார த்தில் பேசப் படுகிறது. 

குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை திணற வைக்கவே சுயேட்சைகள் களம் இறக்கப் பட்டதாக கூறப்படு கிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. 

முதலில் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன. 

அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் படிவம் B-ல் ஒருங்கி ணைப்பாளர் பன்னீர் செல்வம் 

மற்றும் இணை ஒருங்கி ணைப்பாளர் பழனிசாமி கையெழுத் திட்டுள்ள தாக தகவல்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக் கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டது. 

விஷால் வேட்பு மனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறை யாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனை யில் இழுபறி நீடிக்கிறது. அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 30 வேட்பாளர் களின் மனு நிராகரிக்கபட்டு உள்ளது. இன்று பிற்பகல் 4 மணியுடன் மனுக்கள் பரிசீலனை நிறைவு பெறுகிறது 

நாளை மறுநாள் வேட்பாளர் களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings