நீங்களோ அல்லது உங்கள் பார்வையோ போகும் இடத்தினை திசை என்று சொல்ல லாம். புவியில் நீங்கள் பரந்துபட்டு எங்கு வேண்டு மானாலும் போகலாமே,
அப்படி யெனில் அந்தத் திசைக் கெல்லாம் ஒரு பெயர் வேண்டுமே. ஆக புவியில் நேர் திசைகள் (Cardinal Directions) என நான்கு வரையறுக்கப்பட் டுள்ளது.
சூரியன் உதிக்கும் திசை கிழக்கு, அதற்கு எதிர்த்திசை மேற்கு. கிழக்கினைப் பார்த்து நிற்கையில் இடது புறம் இருப்பது வடக்கு,
வலதுபுறம் இருப்பது தெற்கு. (நன்றாகக் கவனி யுங்கள், சூரியன் உதிக்கும் திசைதான் கிழக்கு. கிழக்கில் தான் சூரியன் உதிக்கும் என்று சொல்லக் கூடாது. :))
அப்புறம் நீங்கள் விருப்பப் பட்டால் உள்ளுக்குள் உள்ளாக, திசைக்குள் திசையாக 360 பாகைக ளிலும் திசைகளைக் குறித்துக் கொள்ளலாம்,
வடகிழக்கு (NE), வடமேற்கு (NW) எனப் பிரித்துக் கொண்டே போகலாம். சரி, இப்பொழுது புவியைத் தாண்டி விண்வெளி க்கு வருவோம்.
இங்கும் நீங்களும் உங்கள் பார்வையும் இன்றைக்கு எங்கு வேண்டு மானாலும் போகலாம். அவற்றை எப்படி வரைய றுத்துக் கொள்வது.
இங்கு தான் சூரியன் உதிக்காதே. வடக்கு கிழக்கு எல்லாம் புவிக்குள் தான் செல்லு படியாகும்.
சூரிய மண்டல த்திற்குள், சூரியனை நோக்கி அல்லது சூரியனை விட்டு விலகி என்று வேண்டு மெனில் கொள்ளலாம்.
ஆனாலும் மேல் கீழ்.... அதாவது வடக்கு தெற்கு...? அதற்குத் தான்,வெகு தொலைவில் அதாவது, Ursa Minor எனப்படும் நட்சத்திர மண்டல த்தில் உள்ள Polaris எனப்படும்
நட்சத்தி ரத்தினை நாம் வட துருவ நட்சத்திரம் என்று அடையாளங் கொள் கின்றோம்.
இது கிட்டத் தட்ட புவியின் நடு அச்சுக்கு நேராக வடக்குப் பக்கத்தில் இருக்கி ன்றது. சரி, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கி ன்றதே,
அப்பொழுது இந்த துருவ நட்சத்திரம் இடம் மாறி விடாதா? விடும், இப்பொழுதும் அது இடம் மாறிக் கொண்டே தான் இருக் கின்றது.
ஆனால், அத்துருவ நட்சத்திர த்திற்கும் நமக்கும் உள்ள அதிதொலைவு காரண மாக அந்த இட வேறுபாடு புறக்கணிக் கத்தக்க தாகும்.
அப்படி பெரிய அளவில் இடமாற்றம் ஏற்பட பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகும்.
அது வரைக்கும் அது தான் நமக்கு வழிகாட்டி அல்லது திசைகாட்டி. தெற்குப் பகுதி அச்சிற்கு நேராக அந்த Polarisயைப் போன்று பிரகாச மான நட்சத்திரம் ஏதும் இல்லை.
இருப்பினும், Octans நட்சத்திரக்கூட்டத்தில் வெறுங் கண்ணால் காணக்கூடிய Sigma Octantis (Polaris Australis என்றும் குறிப்பிட ப்படும்)
என்னும் நட்சத் திரத்தை தென் துருவ நட்சத்திரம் என்று கொண்டு ள்ளோம்.
ஆக, சூரிய மண்டலத்தினை விட்டு வெளியே சென்றாலும், இந்த நட்சத்தி ரங்களை வைத்து வடக்கு தெற்கு எனப் பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம். எல்லாம் நம் வசதிக்குத் தான்.
பி.கு. துருவ நட்சத்திரம் என்றாலே Polaris எனப்படும் வடக்கில் உள்ள நட்சத்திரம் தான். புவியில் மாலுமிகள் அதைத் தான் வழி காட்டி யாகக் கொண்டி ருந்தனர்.
இப்பொழு தெல்லாம் புவியைக் கண்காணிக்கும் செய்மதிகள் மூலமாக மாலுமிகள் தாங்கள் கடலில் எங்கிருக் கின்றோம் என்று தெரிந்து கொள்கி ன்றார்கள். GPS = Global Positioning System