மிலாடி நபியை யொட்டி டிசம்பர் 2ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது.
இதனால் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்.
மேலும் இந்த உத்தரவை மீறி தவறான வழியிலோ அல்லது விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அன்புச் செல்வன் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
Tags:
Thanks for Your Comments