பெரியபாண்டியன் வழக்கு... கொள்ளையன் மனைவி கைது !

0
நாதுராமின் மனைவி மஞ்சு நேற்று மாலை ஜோத்பூரின் கிராமத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். 
பெரியபாண்டியன் வழக்கு... கொள்ளையன் மனைவி கைது !
பெரிய பாண்டியன் சுடப்பட்ட வழக்கில் டி.எம்.முனிசேகர் மீது இபிசி 304 ஏ மற்றும் கைதான மூவர் மீது கொலை வெறி தாக்குதல் வழக்குகள் பதிவான தாகத் தெரிய வந்துள்ளது.

சென்னை கொளத்தூரின் நகைக் கடையில் கொள்ளை யடிக்கப் பட்ட சம்பவத்தின் குற்ற வாளிகளில் ஒருவரான மஞ்சு ஜாட் கைது செய்யப் பட்டுள்ளார். 

இவர் நாதுராமின் மனைவி ஆவார். நாதுராமை தேடி ராஜஸ்தான் வந்த தமிழக போலீஸ் படையினர் கடந்த செவ்வாய்க் கிழமை அவரது நண்பர் தேஜாராமின் பண்ணை வீட்டை முற்றுகை யிட்டனர். 

அப்போது நடந்த சம்பவத்தில் பெரிய பாண்டியன் குண்டு பாய்ந்து பலியானார். அங்கிருந்து தப்பிய நாதுராமை பிடிக்க ராஜஸ்தானின் போலீஸார் 6 குழுக்கள் அமைத்து தேடி வரு கின்றனர்.

நாதுராம் சுற்றி வளைப்பு

ஜோத்பூர் மாவட் டத்தின் மாலாவாஸ் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மனைவி மஞ்சு வுடன் நாதுராம் ஒளிந்திருப் பதாகத் தகவல் கிடைத்தது. 
இந்த பகுதியை ராஜஸ்தான் போலீஸ் படை நேற்று சுற்றி வளைத்தது. இதில் நாதுராம் தப்பி ஓடிவிட அவரது மனைவி மஞ்சு கைது செய்யப் பட்டு ஜெய்தரன் கொண்டு வரப்பட் டுள்ளார். 

அவர் இன்று ஜெய்தாரன் நீதி மன்றத்தில் ஆஜர்ப டுத்தப்பட உள்ளார்.

நாதுராம்

இதற் கிடையே, குண்டு பாய்ந்து பலியான பெரிய பாண்டியன் வழக்கில் ஜெய்தாரன் போலீஸ் நிலையத்தில் முனிசேகர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. 

அலட்சியம் காரணமாக உயிர் பறிப்பு என்று குற்றம் சுமத்தி இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ஐபிசி 304 ஏ பிரிவில் வழக்கு பதிவாகி உள்ளது. 

பெரியபாண்டியன் வழக்கு... கொள்ளையன் மனைவி கைது !
இந்த குற்றம் நிரூபண மாகும் பட்சத்தில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது வெறும் அபராதம் விதிக் கப்படும் வாய்ப்புகள் உள்ளன. 

இந்த வழக்கில் நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப்படும் குற்றவாளி களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

எனவே, தடயவியல் ஆய்வு களின் இறுதி அறிக்கை வந்த பின் அதன் முடிவுகளுக்கு ஏற்ப முனிசேகர் மீண்டும் ஜெய்தாரன் வர வேண்டி இருக்கும். 

அதே சமயம், முனிசேகர் மீது சென்னை காவல் துறை சார்பில் துறை ரீதியான விசாரணை நடத்த ப்படும் வாய்ப்புகளும் உள்ளன.

தடயவியல் ஆய்வு

பெரிய பாண்டியன் சுடப்பட்ட வழக்கில் முனிசேகர், ஜெய்தாரன் காவல் நிலைய த்தில் புகார் பதிவு செய்திருந்தார். 
அதில், பண்ணை வீட்டின் முற்றுகையின் போது குற்ற வாளிகள், பெரிய பாண்டியனை சுட்டு விட்டுத் தப்பிய தாகக் குறிப்பிட்டி ருந்தார். 

மறுநாள் சென்னை யில் இருந்து கூடுதல் ஆணையர் சந்தோஷ் குமார் வந்த பின் பதிவு செய்யப் பட்ட வாக்கு மூலத்தில், 

பெரிய பாண்டியனை கொலை வெறி தாக்கு தலில் இருந்து காப்பா ற்றும் பொருட்டு துப்பாக்கியை வெளியில் எடுத்த போது அதில் இருந்து குண்டு பாய்ந்து விட்ட தாகக் கூறி யுள்ளார். 

இந்த குண்டு பெரிய பாண்டியன் மீது பட்டு அவர் பலியான தாக தடயவியல் ஆய்வாளர் களின் ஆரம்ப கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, நேற்று முன் தினம் கைது செய்யப் பட்ட தேஜாராம், அவரது மனைவி மற்றும் மகள் மீது கொலை வெறி தாக்குதல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 
இவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குகள் பதிவாக வில்லை எனத் தெரிய வந்துள்ளது. இவர் களுடன் நாதுராமுடன் சேர்த்து வேறு யார் இருந்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரிய வில்லை.

ராஜஸ்தான் போலீஸ் அறிக்கை ,அதன் முழு விவரம் வருமாறு:

காவல் துறை ராஜமங்கலம் சென்னை சிட்டி வழக்கு 1181/207 பிரிவு 454, 380-ன் வழக்குகளின் கீழ் தேடப்பட்ட குற்ற வாளிகள் ஸ்ரீநாதுராம் பிந்தேல், அவனது மனைவி ஸ்ரீமதி மஞ்சு, ராமாவாஸ் கண்ட்லா கிராம வாசிகள். 

தீபாராம் ஜாட் காரியா நியின்வாசி இவர்களை தேடிக் கொண்டு சென்னை நகரில் இருந்து காவல் துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன், முனிசேகர் 

மற்றும் இரு தலைமை காவலர்கள் மற்றும் ஒரு காவலர் வந்தனர். 

கரோலியா சாலையில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் தேஜாராம் ஜாட் என்பவர் குடும்பத் துடன் வசித்து வருவ தாகவும், 
அவர்களுடன் தேடப்பட்டு வரும் மூன்று குற்ற வாளிகளும் மறைந்தி ருப்பதாகவும் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. 13-12-2017 விடியற் காலை சுமார் 2.30 மணிக்கு சென்னை படையினர் வீட்டை முற்றுகை யிட்டனர். 

அப்போது குற்றவாளி களான தேஜாராம் அவரது குடும்ப உறுப்பி னர்கள் சென்னை போலீஸாருடன் எதிர் தாக்குதலில் ஈடுபட் டார்கள். 

இது வரையில் நடந்த ஆய்வின்படி போலீஸ் படையினரின் உயிரை பறிக்கும் விதத்தில் தாக்குதல் நடை பெற்றது. இதனால், குழுவின் நான்கு உறுப்பினர்கள் சுவர் ஏறி குதித்து தப்பி வெளியே வந்தார்கள். 

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உள்ளேயே இருந்து விட்டார். தனியாக சிக்கிய அவர் மீது குற்ற வாளிகள் தாக்குதல் நடத்தினர். 
அப்போது வெளியில் நின்று கொண் டிருந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர் தன்னுடைய பிஸ்டலை எடுக்கும் போது திடீர் என குண்டு வெளி யேறியது. 

இதனால், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மீது குண்டு பட்டது. 

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சிகிச்சைக்காக அந்த குழு உறுப்பினர்கள் ஜெய்தாரன் அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றார்கள். 

அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்து வர்கள் அறிவித்தனர். 

சென்னை காவல் துறை மூலமாக பதிவு செய்யப் பட்ட புகாரின்படி, போலீஸ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி யதற்காக தேஜாராம், S/O புர்காராம், 

இனம்: 
ஜாட், வயது 45, லவுடோத்திவாசி. ஸ்ரீமதி பிந்தியா W/O தேஜாராம், 

இனம்: 

ஜாட் வயது 42, சுகுனா D/Oதேஜாராம் ஜாட் வயது 20 ஆகியவர்கள் கைது செய்யப் பட்டனர். இவர்களிடம் விசாரணை செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டனர். 

அவர்களில் குற்றவாளி களான பிந்தியா மற்றும் சுகுனா நீதிமன்ற காவலில் அனுப்பப் பட்டனர். குற்ற வாளியான தேஜாராம் இரு நாட்களுக்கு போலீஸ் காவலுக்கு அனுப்பப் பட்டான்.
பெரியபாண்டியன் வழக்கு... கொள்ளையன் மனைவி கைது !
மற்ற குற்றவாளி களை கைது செய்வதற் காக தனித்தனி குழு அமைக்கப் பட்டு தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. 

எந்த ஆயுதத்தில் இருந்து குண்டு வெளியே வந்ததோ அதை எப்.எஸ்.எல் பரிசோதனைக் காக அனுப்பப் படுகிறது.

இந்த எப்.எஸ்.எல் -ல் இருந்து பெய்லஸ்டிக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், செரோலஜி நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். 

ஜோத்பூர் பகுதியை சேர்ந்த ஐ.ஜி மற்றும் கூடுதல் ஆணையர் சந்தோஷ் குமார் ஆகியோரும் அந்த இடத்தை பார்வை யிட்டனர். 
குண்டு வெடித்தது மற்றும் பெரிய பாண்டியன் மரணம் சம்பந்த மாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதன் இறுதி முடிவு எப்.எஸ்.எல் இறுதி அறிக்கை வந்த பின் மற்றும் விசாரணை முடிந்த பின் அறிவிக் கப்படும். இவ்வாறு அதில் தீபக் பார்கவ் குறிப்பிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings