சென்னை நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான கொள்ளை யர்களை பிடிக்க சென்ற போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழக தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் பலியானார்.
இது தொடர் பான வழக்கை, ராஜஸ்தான் பாலி மாவட்ட த்தில் உள்ள ஜெய்தரன் போலீசார் விசாரித்து வருகிறார்.
விசாரணை அதிகாரியான ஜெய்தரன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பவன்லால் சவுத்ரி இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
இந்தநிலை யில் உயிரிழந்த பெரிய பாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை என்றும், அந்த குண்டை தீவிரமாக தேடி வருவ தாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து ஜெய்தரன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பவன்லால் சவுத்ரி, கூறியதாவது:-
துப்பாக்கி சூட்டில் பலியான பெரிய பாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை. சம்பவம் நடந்த இடத்தை முழுவது மாக சோதனை யிட்டும், அந்த குண்டு எங்களுக்கு கிடைக்க வில்லை.
அந்த குண்டை தீவிரமாக தேடி வருகிறோம். பெரிய பாண்டியன் மரணம் தொடர்பான விவகார த்தில் மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை.
முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டு உள்ளதாக வரும் செய்திகள் தவறானது. முனிசேகர் அளித்த மனு அடிப்படையில் நாதுராம், அவரது மனைவி மஞ்சு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டு உள்ளது.
பெரிய பாண்டியனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை கிடைத்தால் மட்டுமே உண்மை யிலேயே என்ன நடந்தது? என்பது தெரிய வரும்.
முடிவில்...
சென்னையில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அது எங்களுக்கு தேவை யில்லாதது. துப்பாக்கி சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரிழந்தது குறித்த வழக்கே எங்களின் பிரதானம்.
அந்தவகை யில் முக்கிய குற்ற வாளியான நாதுராமை பிடிக்கும் வேட்டை யில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். நாதுராமின் மனைவி மற்றும் அவர்களது உறவினர் களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த விவகாரத் தில் எங்களுடன் பி.லி.சிட்டி போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எங்களை பொறுத்தவரை துப்பாக்கி சூட்டுக்கு நாதுராம் காரணமாக இருக்க முடியாது என்றே நினைக்கிறோம்.
ஏனென்றால் சம்பவம் நடந்த சமயத்தில் நாதுராம் மற்றும் தேஜாராமின் குடும்பத்தி னரிடம் எந்த விதமான துப்பாக்கியும் இல்லை.
தேஜாராமின் குடும்பத்தினர் - தனிப்படை போலீசார் இடையே சண்டை நடந்த போது, தவறுதலாக குண்டு பாய்ந்து பெரிய பாண்டியன் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதுகிறோம்.
இருந்தாலும் அறிக்கைகளின் முடிவில் உண்மை நிலவரம் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments