ஹிமாச்சலின் தியோக் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராகேஷ் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத் தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிககை இன்று நடை பெற்றது. இதில் பாஜக 44 இடங் களிலும், காங்கிரஸ் 21 இடங் களிலும், மற்ற கட்சிகள் 3 இடங் களிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தல் முடிவு களில் ஒரு விஷேசம் என்ன வென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தான் ராகேஷ் சின்ஹா. அவர் கடந்த 1993-ஆம் ஆண்டு சிம்லா தொகுதி யின் எம்எல்ஏ வாக இருந்தார். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் தியோக் தொகுதியில் போட்டி யிட்டார்.
24,791 வாக்குகள் பெற்று ராகேஷ் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டி யிட்ட பாஜக உறுப்பினர் ராகேஷ் வர்மா 22,808 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் தீபக் ரஹோர் 9,101 வாக்குளும் பெற்றனர்.
CPIM Politburo congratulates people of Theog, #HimachalPradesh for electing CPIM candidate Rakesh Singha. This victory reflects the faith people of Theog have reposed in the CPIM to protect their rights & work for people’s interests.#ElectionResults2017https://t.co/Iy6UkIZSU0 pic.twitter.com/GW3UZH2lBf— CPI (M) (@cpimspeak) December 18, 2017
இந்த வெற்றி மூலம் ராகேஷ் சின்ஹா 2-ஆவது முறையாக சட்டசபை உறுப்பி னராகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தியோகி தொகுதி யில் போட்டி யிட்ட போது 10,000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
Thanks for Your Comments