பெண் சிசுக்கொலையை தடுக்கவும், வறுமை யில் உள்ள பெற்றோரு க்கு உதவும் நோக்கோடு
இந்த இலவச கல்வி அறிவிப்பை வெளியிட் டுள்ளதாக பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் கூறியுள்ளார்.
புத்தாண்டை கொண்டாட உலகமே தயாராகி வரும் நிலையில், பெங்களூரு மக்களு க்கு ஒரு இன்ப அதிர்ச்சியை நகர மேயர் சம்பத் ராஜ் கொடுத் துள்ளார்.
அதாவது புத்தாண்டு அன்று பெங்களூரு அரசு மருத்துவ மனையில் முதலாவ தாக
பிறக்கும் பெண் குழந்தைக்கு பள்ளி முதல் கல்லூரி வரை இலவச கல்வி அளிக்கப் படும் என அவர் கூறி யுள்ளார்.
நாட்டில் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதாசாரம் குறைந்து வருவதாலும், வறுமையில் வாழும்
ஏழை பெற்றோரு க்கு உதவும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ள தாக சம்பத் ராஜ் கூறி யுள்ளார்.
பிறந்த குழந்தை யின் வங்கியில் வைப்பு தொகையாக 5 லட்சம் போடப்படும் என்றும்,
அதனை அக்குழந்தை யின் பெற்றோர் கல்விக்காக பயன் படுத்திக் கொள்ள லாம் என்றும் கூறி யுள்ளார்.
இந்நிலை யில் அந்த அதிர்ஷ்ட குழந்தை யார் என்று தற்போதே அரசு மருத்துவ மனைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments