திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்து வதை லஞ்சம் கொடுப்பது என விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீதான புகாரில்
முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி எனும் திரைப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்து வதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர் சித்தார்.
இது இந்துக் களின் உணர்வுகளை காயப் படுத்தும் வகையில் இருப்ப தாகவும், இரு மதங்களு க்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி
இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி. நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணை யரிடம் புகார் அளித்தி ருந்தார்.
அவரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி,
எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தர விடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க லாம் என சென்னை காவல் ஆணை யருக்கு உத்தர விட்டார்.
Thanks for Your Comments