சவுதி அரேபியாவில் வருகிறது திரையரங்குகள் !

0
சவுதி அரேபியா வில் கடந்த 1980-ம் ஆண்டில் திரையரங் குகளுக்கு தடை விதிக்கப் பட்டது. சுமார் 37 ஆண்டு களுக்குப் பிறகு அந்த தடையை நீக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் வருகிறது திரையரங்குகள் !
அதன்படி அடுத்த ஆண்டு முதல் அந்த நாட்டில் திரைய ரங்குகள் திறக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சவுதி அரேபியா முழுவதும் 300 திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது.

இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது.

சவுதி அரேபியாவில் திரையரங் குகளுக்கு உரிமம் வழங்கும் நடவடி க்கைகளை ஒலி, ஒளி ஊடகத்துக் கான
ஆணையம் தொடங்கி விட்டதாக அந்நாட்டு கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சர் அவ்வாட் பின் சலேஹ் அலாவாட் தெரிவித் துள்ளார்.

சவுதி அரேபியா வின் பட்டத்து இளவரசர் சல்மான் பல்வேறு பொருளாதார சீர்திருத்த ங்களையும் சமூக மாற்றங் களையும் அமல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண் களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings