செல்போன் வாங்கி யதற்கு பணம் கொடுக்காத பிரச்சினையில், 8-ம் வகுப்பு மாணவரை அடித்து கொலை செய்த சக வகுப்புத் தோழர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறும் போது, பள்ளிகொண்டா அடுத்த வேப்பங்கால் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் சந்தோஷ் (13).
பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது வகுப்பில் லத்தேரி அடுத்த லப்பை கிருஷ்ணா புரம் கிராமத்தைச் சேர்ந்த முரளி
மற்றும் கோபி (பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன) ஆகியோர் படித்து வந்தனர்.
சில நாட்க ளுக்கு முன்பு வகுப்புத் தோழன் முரளிக்கு குறைந்த விலைக்கு நவீன வசதி கொண்ட செல்போனை சந்தோஷ் விற்றுள்ளார்.
அதற்கான பணத்தை கொடுக் காமல் முரளி காலம் கடத்தி வந்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, தனது ஊருக்கு வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு சந்தோஷிடம் முரளி கூறியுள்ளார்.
அதன்படி, முரளி மற்றும் மற்றொரு வகுப்புத் தோழன் கோபியுடன் லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு நேற்று முன்தினம் சந்தோஷ் சென்றுள்ளார். செல்லும் வழியில் சந்தோஷ் மற்றும் முரளி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, முரளி மற்றும் கோபி ஆகியோர் சேர்ந்து சந்தோஷின் தலையில் கட்டையால் தாக்கி யுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே சந்தோஷ் உயிரிழந்தார்.
பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பி யோடினர். இதற்கிடையில், பள்ளிக்குச் சென்ற சந்தோஷ் வீடு திரும்பாதது குறித்து பார்த்திபன் விசாரித்துள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
நேற்று காலை பள்ளிக்குச் சென்ற பார்த்திபன், தனது மகன் வீடு திரும்பாத தகவலை ஆசிரியர் களிடம் தெரிவித் துள்ளார். சந்தேகத்தின் பேரில் முரளி மற்றும் கோபியிடம் ஆசிரியர்கள் சிலர் விசாரித்துள்ளனர்.
அவர்கள், இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே இருவரையும் பார்த்திபனுடன் லப்பை கிருஷ்ணா புரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, சந்தோஷை லப்பை கிருஷ்ணா புரம் கானாற்றில் கொலை செய்ததை இருவரும் தெரிவி த்தனர்.
இது குறித்த தகவலறிந்த லத்தேரி காவல் துறையினர் விரைந்து சென்று மாணவரின் சடலத்தை மீட்டனர். பின்னர் ஒரு மாணவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மற்றொரு மாணவர் தலைமறைவாக உள்ளார்.
Thanks for Your Comments