பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் மாவட்டத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை டோ செய்த இரண்டு போக்குவரத்து கான்ஸ்டேபிள்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
கார் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டதை மட்டும் உணர்ந்த கான்ஸ்டேபிள்கள் அதில் 12 வயது குழந்தை உறங்கி கொண்டிருப்பதை கவனிக்காமல் டோ செய்ததால்
மூத்த காண்ஸ்டேபிள் சுபாஷ் மற்றும் ஊர் காவல் படையை சேரந்த ஜக்சீர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
காரில் குழந்தை அசந்து உறங்கி கொண்டிருந் ததால், காரின் உரிமை யாளர் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி காய்கறி வாங்க சென்றி ருந்தனர்.
சண்டிகர் பகுதியின் செக்டார் 34, அபனி மந்தி வெளியே நிறுத்தப் பட்டிருந்த காரை டோ செய்த காவல் துறை அதிகாரிகள் அதில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை கவனிக்க வில்லை.
நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த கார் மற்றும் அதில் உறங்கி கொண்டிருந்த குழந்தை காணவில்லை என்ற
புகார் எழுந்ததை தொடர்ந்து இச்சம்பவம் சண்டிகர் காவல் துறை வயர்லெஸ் நெட்வொர்க் மூலம் அனுப்பப் பட்டது.
பின் காரில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை கண்ட காவல் துறையினர் கார் மற்றும் அதில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை ஒப்படைத் தனர்.
நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்துப் பட்டிருந்த கார் மற்றும் அதில் உள்ளவர் களை கவனிக்காமல் போக்குவரத்து காவல் துறையினர் டோ செய்யும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர் கதையாகி வருகிறது.
முன்னதாக மும்பையின் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த கார் மற்றும் அதில் இருந்த குழந்தை மற்றும் பெண்மனியோடு டோ செய்தனர்.
Thanks for Your Comments