இந்திய அணி பயிற்சியின் போது தோனியும் பாண்டியாவும் ஓட்டப் பந்தயம் விளையாடிய வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையே ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க விருக்கிறது.
செவ்வாய்க் கிழமை அன்று வலைப் பயிற்சியில் ஈடுப் பட்டது இந்திய அணி. அப்போது இந்திய அணியின் முன்னாள் தலைவரும்,
இந்நாள் விக்கெட் கீப்பருமான தோனி க்கும், அணியின் இளைய நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா வுக்கும் இடையே விளை யாட்டாக ஓட்டப் பந்தயம் நடந்தது.
மெதுவாக ஜாக் செய்ய ஆரம்பித்து பின்னர் இருவரும் ஓடும் அந்த வீடியோ வில், இறுதியில் தோனியே ஜெயித்தார். இத்தனை க்கும் தோனி பாண்டியாவை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
முதல் ஒரு நாள் போட்டியில், மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்ட மிழக்க, தோனி மட்டுமே நின்று ஆடி அணி ஒரு கவுரவ மான ஸ்கோரை எட்ட உதவினார் என்பது குறிப்பிடத் தக்கது.
A quick 100 metre dash between @msdhoni and @hardikpandya7. Any guesses on who won it in the end? #TeamIndia #INDvSL pic.twitter.com/HpboL6VFa6— BCCI (@BCCI) December 13, 2017
தோனியின் உடற் திறன், விளையாடும் அளவுக்கு அவர் உறுதி யாக இருக்கிறாரா என்றெல் லாம் அவரது விமர்சகர்கள் கேள்வி யெழுப்பிக் கொண்டி ருக்கும் வேளையில்,
அவர்களு க்கு பதில் சொல்லும் விதமாக, தோனியின் ஆட்டமும் ஓட்டமும் அமைந் திருப்பது தோனி ரசிகர் களை குஷியில் ஆழ்த்தி யுள்ளது.
அவர்களு க்கு பதில் சொல்லும் விதமாக, தோனியின் ஆட்டமும் ஓட்டமும் அமைந் திருப்பது தோனி ரசிகர் களை குஷியில் ஆழ்த்தி யுள்ளது.
Thanks for Your Comments