சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் களம் இறங்குவது தொடர் பாக,
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலை வர்கள், தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்?
மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்:–
நடிகர் விஷால் போட்டி யிடுவதால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மறைந்த முதல் –அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதிக் காக நிறைய செய்துள்ளார்.
அவர் கொண்டு வந்த திட்டங்கள் தொகுதி மக்களை நன்றாக சென்றடைந் துள்ளது. ஆர்.கே.நகர் என்பது அ.தி.மு.க. வின் கோட்டை. இதில் சினிமா மாயை எடுபடாது.
இங்குள்ள மக்கள் நன்கு விவரம் தெரிந்த வர்கள், புரிந்த வர்கள், அரசியல் விழிப் புணர்வு மிக்கவர்கள்.
தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்:–
யார் போட்டி யிட்டாலும் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க.வுக்கு வெற்றி நிச்சயம்.
பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்:–
எங்களை பொறுத்த மட்டில் பா.ஜ.க.வுக்கு என்று இருக்கின்ற ஆதரவு எப்போதும் நிலைத்து இருக்கும்.
ஒரு வேளை, விஷால் முயற்சி மாநில அரசுக்கு எதிரான பிரசாரத்தை மேற் கொள்வதாக இருக்கு மானால், அதனால் பாதிக்கப்படப் போவது தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தான்.
அவர்கள் தான் கவலைப் படவேண்டும். எல்லோரும் களம் இறங்குகி றார்கள். இவரும் களம் இறங்கியி ருக்கிறார்.
மக்கள் குறைந்த பட்சம் தேர்தல் பிரசார த்தில் திருவிழா போல காணக் கிடைக்காத நபர்களை தெருவில் காண்பதற் கான வாய்ப்பு அமைந்தி ருக்கிறது.
சுயேச்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரன்:–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டி யிடுகிற அம்மாவின் (ஜெயலலிதா) வேட் பாளரான எனது வெற்றி,
தொகுதி மக்களால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதில், நண்பர் விஷால் மற்றும் எந்தவொரு வேட் பாளராலும் எனது வெற்றி நிச்சயம் பாதிக்காது.
ஆர்.கே.நகர் தொகுதி யில் இணையதள மையம் நடத்தி வரும் நந்தகுமார் (44–வது வார்டு):–
நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றிருக்க லாம்.
அந்த சங்கங் களில் மாற்று மொழி பேசும் உறுப்பினர் இருப்ப தால் அவர் வெற்றி அடைந்திருக்க லாம்.
ஆனால், இப்போது ஆர்.கே.நகரில் உள்ள தமிழ் பேசும் மக்களை அவர் நேரடியாக சந்திக்கப் போகிறார். அவரால் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அவருக்கு டெபாசிட் கிடைப்பதே கஷ்டம்.
கம்ப்யூட்டர் வியாபாரம் செய்யும் ஆனந்தராஜ் (38–வது வார்டு):–
நடிகர் விஷால் இளைஞர் களின் ஓட்டுகளை கவர்வதற் காகவே போட்டியி டுவதாக நான் கருதுகிறேன்.
அவர் களம் இறங்கும் பின் புலத்தில் பாஜ.க. உள்ளது. அவர் போட்டியிட எந்த முகாந்திர மும் இல்லை.
ஆர்.கே.நகர் தொகுதியை சார்ந்த மண்ணின் மைந்தருக்கே எங்களுடைய ஓட்டு.
Thanks for Your Comments