பேஸ்புக் தோழிகளை திருச்சி ஓட்டலுக்கு வரவழைத்து பேசிய போது, இளம் பெண்ணின் சாவியை நைசாக வாலிபர் திருடி நண்பர்களிடம் கொடுத்தார்.
அவர்கள், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று 20 பவுன் கொள்ளை அடித்தனர். இது தொடர் பாக, சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப் பட்டனர்.
சென்னை பல்லாவரம் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கய்யன் மகன் கார்த்திக் (27). பிஎல் பட்டதாரி. இவர் பேஸ்புக்கில் பல பெண் களிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார்.
இதில் திருச்சியை சேர்ந்த பெண்களும் அடங்குவர். கார்த்திக், திருச்சி வந்து கடந்த 28, 29-ம் தேதிகளில் மத்திய பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கி, பேஸ்புக் தோழிகளை வர வழைத்து பேசினார்.
இவர்களில், திருச்சி உய்யக் கொண்டான் திருமலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திருமணமான எம்.இ. பட்டதாரி இளம் பெண்ணும் ஒருவர். இவரது கணவர் மதுரையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார்.
அவர் வாரம் ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார். சம்பவத் தன்று கார்த்தி க்குடன் இளம்பெண் நீண்ட நேரம் பேசி விட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்தார். அதில் 20 பவுன் நகை மாயமாகி இருந்தது. உடனே, போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
அப்போது, இளம் பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். வீட்டை பூட்டி விட்டு வெளியில் எங்கும் சென்றாரா என்று கேட்ட போது, பேஸ்புக் நண்பரை பார்க்க வெளியில் சென்றதாக தெரிவித்தார்.
இதை யடுத்து, சென்னையில் இருந்த கார்த்திக்கை பிடித்து விசாரித்த போது நகையை எடுத்ததை ஒப்புக் கொண்டார்.
நகையை பறிமுதல் செய்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ராயப் பேட்டை அருண் (25), அரவிந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கார்த்திக், கடந்த 29ம் தேதி இளம் பெண்ணை ஓட்டலுக்கு வரவழைத்து பேசினார்.
அப்போது, அவருக்கு தெரியாமல் அவரது கைப்பையில் இருந்த வீட்டு சாவியை எடுத்து, பக்கத்து அறையில் தங்கியிருந்த தனது நண்பர்கள் அருண், அரவிந்தன் ஆகியோரிடம் கொடுத் துள்ளார்.
சாவியுடன் அவர்கள், இளம்பெண் வீட்டுக்கு சென்று பீரோவில் இருந்த நகைகளை எடுத்து வந்தனர். பின்னர் சாவியை கார்த்திக் கிடம் கொடுத்து விட்டனர்.
அவர், இளம் பெண்ணுக்கு தெரியாமல் கைப்பையில் சாவியை வைத்துள்ளார். மேலும், 2 நாட்களில் ஏராளமான பெண்கள், கார்த்திக்குக்கு பரிசு பொருட் களை கொடுத்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
Thanks for Your Comments