காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் மீது புல்லட் பாய்ந்ததால் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ட்ரான் கிராமம் ஓவர் நைட்டில் இந்திய பிரபலமாகி விட்டது.
இதன் அருகேதான் புல்லட் பாபா கோயில் இருக்கிறது. (பயந்து விடாதீர்கள், இது துப்பாக்கி புல்லட் அல்ல..
நாம் ஓட்டும் வாகனம் புல்லட்!) இந்தக் கோயிலின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ் சம்பவம் உண்டு.
யார் இந்த ஓம் பனா?
ஜோத்பூர் - பாலி சாலையில் 45-வது கிலோ மீட்டரில் இருக்கிறது ‘ஓம் பனா மந்திர்’ என அழைக்க ப்படும் புல்லட் பாபா கோயில்.
இந்தக் கோயிலின் திறந்தவெளி மூலஸ் தானத்தில் உயரமான மேடை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
அதன் மீது ஓம் பனாவின் மார்பளவு மார்பிள் சிலை அமைக்கப்பட் டுள்ளது. அதன் அருகிலேயே அவரது போட்டோவும் வைக்கப் பட்டு பூக்களும் மாலை களும் குவிக்கப் பட்டுள்ளன.
மேடை முன்பாக அமர்ந் திருக்கும் பூசாரி, பக்தர்கள் கொடுக்கும் கொப்பரைத் தேங்காய், ஊதுபத்தி
மற்றும் பூ மாலைகளை வாங்கி பூஜை களை செய்து கொண்டி ருக்கிறார். இந்த மேடையின் பின் பகுதியில் கண்ணாடிக் கூண்டுக்குள்,
1985-ம் வருடத்திய மாடல் (RNJ 7773) ராயல் என்ஃபீல்டு 350 சி.சி புல்லட் பைக் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஓம் பனா.. எதற்காக இவருக்குக் கோயில் கட்டி அங்கே புல்லட்டை யும் நிறுத்தி வைத்துக் கும்பிடு கிறார்கள்..?
பாலி நெடுஞ் சாலையில் உள்ளது ரோஹட். இங்கிருந்து ஒரு நாள் நள்ளிர வில் ஒரு புல்லட் சென்று கொண்டி ருந்தது.
அதை ஓட்டி வந்த ஓம் சிங் ராத்தோர் எனும் 26 வயது இளைஞர் அருகிலுள்ள தன் ஜோட்டிலா கிராமத்து க்குத் திரும்பிக் கொண் டிருந்தார்.
அப்போது தீடீரென புல்லட் மண் ரோட்டில் இறங்கியதால் விபத்துக் குள்ளாகி தூக்கி வீசப்பட்டார் ஓம் சிங். அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்த அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இது தொடர் பாக விபத்து வழக்கு பதிவு செய்த ரோஹட் போலீஸார், ஓம் சிங்கின் புல்லட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதன் பிறகு இந்த புல்லட் பற்றி ஏகப்பட்ட கதைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. அந்தக் கதைகள் சில வற்றை நமக்கு எடுத்துச் சொன்னார் கோயில் வளாகத்தில் மேளம் அடித்து கொண்டிருந்த ஈஷு தமாமி.
போலீஸ் ஸ்டேஷன்ல நின்னுட் டுருந்த புல்லட் திடீர்னு அதுவாவே ஸ்டார்ட் ஆன மாதிரி சத்தம் வந்துருக்கு.
யாரோ வண்டியைத் திருடுறாங் களோன்னு சந்தேகப் பட்ட போலீஸார், வெளியில் வந்து பார்த்து ருக்காங்க.
ஆனா, ஆள் யாரும் இல்லை; இஞ்சின் மட்டும் ஓடிட்டு இருந் துருக்கு. மறுநாளும் இப்படியே நடக்கவும் பயந்து போன போலீஸ் காரங்க,
ஓம் பனாவின் (ராஜபுதன இளைஞர் களை ‘பனா’ என மரியாதை யுடன் தான் அழைக்கி றார்கள்) வீட்டாரை அழைத்து புல்லட்டை ஒப்படைத்து விட்டனர்.
ஓம் பனாவின் வீட்டிலும் அதே போல், இரவு நேரத்தில் புல்லட் தானாவே ஸ்டார்ட் ஆனதா சொல்லி ருக்காங்க.
ஒரு நாள் தனது பாட்டியின் கனவில் வந்த ஓம் பனா, பைக் விபத்து நடந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும்படி சொன்னார்.
அதனால் தான் இங்கே இந்தக் கோயில் கட்டப் பட்டது என்று சொன்ன ஈஷூ தமாமி, முன்பு ஓம் பனாவின் வீட்டில் பணி யாளராக இருந்தவர்.
மகனுக்கு புகழ் சேர்க்க
பூசாரி சாத்திலால் உள்ளிட்ட இந்தக் கோயிலில் பணி புரியும் இன்னும் பலரும் முன்பு ஓம் பனாவின் வீட்டில் வேலை செய்தவர்களே.
ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் புல்லட்டை கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியில் எடுத்து ஓம் பனாவின் கிராமம் வரை ஊர்வல மாக எடுத்துச் செல்கி றார்கள்.
திருவிழா போல் கொண்டா டப்படும் இந்த நிகழ்வில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்கி றார்கள்.
நாம் போயிருந்த சமயத்தில் ஜோத்பூரிலிருந்து கோயிலை வேடிக்கை பார்க்க வந்திருந்த பள்ளி ஆசிரியர் மூலாராம் பிஷ்னோய் இன்னொரு தகவலையும் சொன்னார்.
“ராஜபுதன குடும்பங்கள் அதிகமாக வசிக்கும் மாநிலம் என்பதால் இங்கு எப்போதும் அவர்கள் கைதான் ஒங்கி இருக்கும்.
அருகிலுள்ள ஜோட்டிலா கிராமத்து ஜமீன்தாரின் ஒரே மகன் ஓம் பனா. தனது மகனுக்கு நிரந்தர மான புகழை ஏற்படுத்த நினைத்தார் ஜமீன் தார்.
அதற் காகவே ஒரு கதையை கட்டி இந்தக் கோயிலைக் கட்டி விட்டார்கள். இப்போது இந்தக் கோயிலைப் பற்றி தினத்துக்கு ஒரு கதையாய் பரப்பிட்டு இருக்காங்க என்று சொல்லி சிரிக்கிறார் பிஷ்னோய்.
பனாவுக்கு மதுப் படையல்
இந்தக் கோயில் வளாக த்தின் பல இடங்களில் இங்கு கண்டிப்பாக யாரும் மது அருந்தக் கூடாது.’ என்று எழுதி வைத்திருக் கிறார்கள்.
அந்த நெடுஞ் சாலையில் செல்பவர்களில் பலரும் ஓம் பனாவுக்கு மதுவை வைத்துப் படைத்து பூஜை செய்வார்கள். பிறகு, அங்கேயே அமர்ந்து மதுவை குடிக்கவும் செய்தார்கள்.
இப்படிக் குடித்து விட்டு மீண்டும் வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் பலிகள் அதிகமாகின.
கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரின் உத்தர வுப்படி ஓம் பனா கோயிலை சாலையை விட்டு சற்று தள்ளி வைத்தார்கள்.
இப்போதும் பனாவுக்கு மதுப் படையல்கள் தொடர் கின்றன. ஆனால், அங்கு அமர்ந்து மது அருந்து பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தி ருக்கிறது.
இதனால், விபத்து களும் குறைந்தி ருப்பதாகச் சொல்கி றார்கள். ஒரு காலத்தில் ஆள் நட மாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த பகுதி இது.
இப்போது புல்லட் கோயிலை வைத்து ரொம்பவே பிஸியாகி விட்டது. இங்கு வரும் மக்கள் கூட்டத்தை நம்பி
பூஜை பொருட்கள், ஃபேன்சி ஸ்டோர்ஸ், ஓட்டல்கள் என வணிக நிறுவ னங்களும் இங்கு அதிகரிக்கத் தொடங்கி விட்ட தால் ஒரு மினி சுற்றுலா தலமாகவே மாறி விட்டது புல்லட் பாபா கோயில்!
Thanks for Your Comments