டிடிவி பெயரில் மோசடி? போலீசில் புகார் !

0
திருச்சி உறையூரை சேர்ந்தவர் ஆல்பர்ட் ராஜா. சில ஆண்டுக்கு முன் மகளிர் சுய உதவிக் குழுவில் பணம் வசூலிப்பவராக இருந்தார். 
டிடிவி பெயரில் மோசடி? போலீசில் புகார் !
வேலூரை தலைமை யிடமாக கொண்ட ராயல் அக்ரோ டைரி சார்பில் இரட்டிப்பு சீட்டு வசூலில் ஈடுபட்டார். திருச்சி கம்பரசம் பேட்டையில் உள்ள செல்வி என்பவர் மூலம் வீடு வீடாக சென்று சீட்டு பணம் வசூல் செய்தார். 

பொது மக்களிடம் டெபாசிட் பணமும் வசூலித்தார். அதன்படி ரூ.1 லட்சம் கொடுத்தால் 5 வருடத்தில் ரூ.2 லட்சமாக திருப்பி தரப்படும். 

மாதாந்திர சீட்டில் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டினால் 5 வருட முடிவில் வட்டி ரூ.30 ஆயிரத்துடன் அசல் பணம் திருப்பி தரப்படும் என கூறி 50க்கும் மேற்பட்டவர் களிடம் ரூ.25 லட்சம் வரை வசூலித்து உள்ளார். 

சீட்டு கட்டிய காலம் முதிர்வு அடைந்தும் பணம் திரும்ப கொடுக்க வில்லை. இதனால் பாதிக்கப் பட்ட மக்கள் நேற்று திருச்சி பொருளாதார குற்றப் பிரிவில் புகார் செய்தனர்.

பணம் கட்டி ஏமாந்த அங்கன்வாடி ஆசிரியை வசந்தா மற்றும் ஆயிஷா கனி, தனபால் ஆகியோர் கூறுகையில், ‘ராயல் அக்ரோ டெய்ரி என்ற நிறுவனத்தின் பெயரில் இந்த பணம் வசூலிக்கப் பட்டது. 
காலக்கெடு முடிந்து பணத்தை திருப்பி கேட்ட போது, இந்த நிறுவன த்தில் வசூலான பல கோடி பணம் எல்லாம் டிடிவி தினகரனிடம் உள்ளது. 

எனவே பணத்தை பற்றி கவலைப் படாமல் இருங்கள், போலீசில் புகார் அளித்தால் பணம் திருப்பி வராது என கூறுகிறார். 

எங்களை போல் திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங் களில் பலகோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து விசாரித்து பணத்தை பெற்று தர வேண்டும் என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings