சிறுமியின் மூக்கை கடித்த நாய், தத்து எடுத்த அமெரிக்க பெண் !

0
நாயால் கடியுண்டு தன் மூக்கை இழந்த ரூபா என்ற சிறுமியை அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டன் வில்லியம்ஸ் என்ற பெண்மணி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சிறுமியின் மூக்கை கடித்த நாய், தத்து எடுத்த அமெரிக்க பெண் !
கிறிஸ்டன் வில்லியம் ஸிற்கு திருமணம் செய்து கொள்ள விருப்ப மில்லை. ஆனால் தான் ஒரு தாயாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது.

இதனால் இந்தியா வில் இருந்து குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்து பல்வேறு குழந்தை களின் புகைப் படத்தை பார்த்துள்ளார்.

சிறுமி ரூபாவின் மூக்கை நாய் கடித்து தின்று விட்டதால் அவரது முகம் பார்ப்பதற்கு அவலட்சண மாக இருந்துள்ளது. இதனை பொருட் படுத்தாமல் ரூபாவை வில்லியம்ஸ் தத்தெடுத் துள்ளார். 

ரூபாவுடன் சேர்த்து முனி என்ற சிறுமியையும் வில்லியம்ஸ் தத்தெடுத் துள்ளார். சிறுமி முனி முகத்தில் அதிக தழும்புகள் இருந்துள்ளது.
தொண்டு நிறுவனத் தின் உதவி யுடன் இவ்விறு சிறுமிகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதற் காக நிதியை திரட்டி யுள்ளார்.

அந்த நிதி உதவியுடன் இவ்விறு சிறுமிக ளுக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டதில்,  ரூபாவின் மூக்கு ஓரளவுக்கு சரியாகி யுள்ளது மற்றும் முனியின் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந் துள்ளன.

தற்போது இச்சிறுமிகள் இருவரும் நலமாக இருப்பதாக வில்லியம்ஸ் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings